Why Sudha Murty, philanthropist and author, stopped buying sarees despite Rs 700 crore net worth Twitter
இந்தியா

700 கோடி சொத்து இருந்தும் 30 வருடங்களாக ஒரு புடவை கூட வாங்காத சுதா மூர்த்தி - ஏன்?

Priyadharshini R

1981ஆம் ஆண்டு ஏழு பேர் சேர்ந்து தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், இன்று உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவரான நாராயண மூர்த்தியின் மனைவி தான் சுதா மூர்த்தி. இவர் சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆவார்.

சுதா தனது பணியை கணினியியலாளராகத் துவங்கினார். இன்று இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவியாக உள்ளார். 700 கோடி சொத்து மதிப்பு இருந்தாலும், சுதா மூர்த்தி மூன்று தசாப்தங்களாக அதாவது 30 வருடங்களாக புதிய புடவையை வாங்காமல் இருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

எதற்காக இந்த முடிவு என்று சுதா ஒரு நேர்காணலில் தனது காரணத்தை விளக்கியிருக்கிறார்.

"நான் புனித நீராடுவதற்காக காசிக்கு சென்றேன், காசிக்குச் செல்லும்போது நீங்கள் மிகவும் ரசிக்கும் ஒன்றை விட்டுவிட வேண்டும், அதனால் நான் ஷாப்பிங்கை விட்டுவிட்டேன், குறிப்பாக புடவைகள், அப்போதிருந்து, நான் இப்போது வரை அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குகிறேன்" என்றார்

அந்த தொகையை புத்தகங்களுக்காக செலவிடுகிறாராம். சுமார் 20,000 புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார். அப்போது வெளியில் செல்லும் போது புதுபுடவை அணியமாட்டாரா சுதா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு தோன்றும்.

சுதா தனது சகோதரிகள், நெருங்கிய நண்பர்கள், என்ஜிஓக்கள் பரிசளித்த புடவைகளை அணிவாராம்.

சுதா 2006 இல் சமூகப் பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் 2023 இல் பத்ம பூஷண் விருதையும் பெற்றார். சுதாவின் மகள் அக்ஷதா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?