ஓநாய் தாக்குதல் Wolves Attack
இந்தியா

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

ஓநாய் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே படுக்க வைக்க வேண்டாமென வனத்துறையினர் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கதவுகள் இல்லாததால் ஓநாய்கள் வீட்டுக்குள் நுழைகின்றன. நீண்ட நேரம் மின்வெட்டும் ஓநாய்களுக்கு சாதகமாக அமைகிறது.

Antony Ajay R

உத்தரபிரதேசம் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹாசி என்ற பகுதியில் ஓநாய் கூட்டம் 30 கிராமங்களில் 6 குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றுள்ளது. 26 பேர் காயமடைந்துள்ளனர். ஓநாய் கூட்டத்தைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் ஒரு குழுவை ஏற்பாடு செய்துள்ளனர்.

6 குழந்தைகள் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்தது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண்ணின் மரணத்தில் மட்டும் சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓநாய் நடமாட்டத்தால் அனைத்து கிராம மக்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

ஓநாய்களைப் பிடிக்க தெர்மல் ட்ரோன்கள், கேமராக்கள், வலைகள் வைத்துள்ளனர். இதுவரை 3 ஓநாய்களைப் பிடிட்துள்ளனர்.

ஓநாய் நடமாட்டம் இருப்பதால் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் படுக்க வைக்க வனத்துறையினர் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கதவுகள் இல்லாததால் ஓநாய்கள் வீட்டுக்குள் நுழைகின்றன. நீண்ட நேரம் மின்வெட்டும் ஓநாய்களுக்கு சாதகமாக அமைகிறது.

பொதுவாக ஓநாய்களை மனிதர்களை தாக்குவது இல்லை. இந்த சிறியக் கூட்டம் தவறுதலாக மனிதர்களைத் தாக்கி, தற்போது அதற்குப் பழகியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "மனிதர்களும் ஓநாய்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்" என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களைத் தாக்கும் ஓநாய் கூட்டத்தில் இன்னும் 5,6 ஓநாய்கள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். மஹாசி பகுதியில் ஓநாய் தாக்குதல் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த 2004ம் ஆண்டு ஓநாய் தாக்குதலில் 32 குழந்தைகள் மரணித்தனர். 2020ம் ஆண்டு சில ஓநாய் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

"பொதுவாக மனிதர்கள் முன் தோன்ற விரும்பாத, சிறிய விலங்குகள், பறவைகளை வேட்டையாடக் கூடிய ஓநாய்கள், காக்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம்" எனக் கூறுகிறார் பஹ்ரைச் மாவட்டத்தின் பிரதேச வன அலுவலர் அஜீத் பிரதாப் சிங்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?

Kottukaali: இசை இல்லாத திரைப்படம், புதிய அனுபவத்தைக் கொடுத்ததா? | Social Media Review