டெல்லி மெட்ரோவில் காதலனை சரமாரியாக கன்னத்தில் அடித்த காதலி - இணையவாசிகள் காட்டம் Twitter
இந்தியா

டெல்லி மெட்ரோவில் காதலனை சரமாரியாக கன்னத்தில் அடித்த காதலி - இணையவாசிகள் காட்டம்

மெட்ரோவில் உள்ள மற்ற பயணிகளோ வேடிக்கை பார்க்கின்றனர், ஒருவர் அதனை வீடியோ பதிவை செய்கிறார், ஆனால் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.

Keerthanaa R

டெல்லி மெட்ரோவில் பெண் ஒருவர் தனது காதலனை சரமாரியாக திட்டி கன்னத்தில் அரையும் வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே டெல்லி மெட்ரோ ஹெட்லைன்களில் வந்துகொண்டு தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் ஷூட் செய்வது தொடங்கி, இளம் காதல் ஜோடிகள் முத்தமிட்டுக் கொள்வது வரை, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

தற்போது மெட்ரோ ரயிலுக்குள் இளம் பெண் ஒருவர் அவருடன் பயணித்த நபரை தாக்குவதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது

ட்விட்டரில் Ghar Ke Kalesh என்கிற ஐடியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த பெண் தன்னுடன் பயணிக்கும் ஆண் நண்பனை கன்னத்தில் தொடர்ச்சியாக அரைகிறார், மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார்.

ஆனால் அந்த ஆணோ எதற்கும் ரியாக்ட் செய்யாமல், பொறுமையாக அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

மெட்ரோவில் உள்ள மற்ற பயணிகளோ வேடிக்கை பார்க்கின்றனர், ஒருவர் அதனை வீடியோ பதிவை செய்கிறார், ஆனால் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து பல எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பல இணையவாசிகளும், இதுவே அந்த ஆண் அப்பெண்ணை அடித்திருந்தால், வன்கொடுமை, ஆணாதிக்கம் என பட்டங்கள் கட்டி ஊரே கூடி அவரை காப்பாற்ற முயற்சிக்கும்.

ஆனால் இந்த வீடியோவில் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஆணுக்கு ஆதரவாக யாரும் முன்வரவில்லை என கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?