Uber Canva
இந்தியா

”வரும் ஆனா வராது” வாடிக்கையாளருக்கு Uber டிரைவர் அளித்த பதில் வைரல்

இந்த வாடகை கார் ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு பல நேரங்களில் நகைச்சுவையை தூண்டும் விதமாக தான் இருக்கிறது.

Keerthanaa R

cab -யை புக் செய்த வாடிக்கையாளர் தன்னை pick up செய்துகொள்ள வருவீர்களா என்று கேட்க அதற்கு Uber கார் ஓட்டுநர் ஒருவர் அளித்த பதில் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

தற்போதெல்லாம் நாம் ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால், வழி தெரியாது என்று யோசிக்க வேண்டாம். காரணம், இரு சக்கர வாகனம் முதல், கார் வரை வாடகைக்கு புக் செய்து நாம் செல்ல வேண்டும் இடத்திற்கு சென்றுவிடலாம்.

மழைக்காலம் வந்தால் கொஞ்சம் சிரமம் தான். போக்குவரத்து நெரிசல் காரணமாக , ஓட்டுனர்களே நமது பயணத்தை நிராகரித்து விடுவார்கள்

எனினும், இந்த வாடகை கார் ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு பல நேரங்களில் நகைச்சுவையை தூண்டும் விதமாக தான் இருந்துள்ளது.

அந்த வகையில், டெல்லியில் ஒரு பெண் கேப் புக் செய்துவிட்டு, வண்டி எங்கிருக்கிறது, எப்போது வருவீர்கள் என்று விசாரிக்க அவரை தொடர்புகொண்டுள்ளார். அந்த உரையாடல் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

கேப் புக் செய்துவிட்டு, நாம் போய் சேரும் இடம் எங்கே என்பதை நாம் தான் ஓட்டுநர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்த பெண்ணும் தான் செல்ல வேண்டிய இடத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். இவர் வாடகை கார் புக் செய்த போது மழை என்பதால், அவர் வருகிறாரா இல்லையா என்பதனை தெளிவாக சொல்லவில்லை. முதலில் வருகிறீர்களா என்று கேட்டதற்கு "என்ன செய்வது?" என்று அவர் கேட்டார்.

பிறகு வருகிறீர்கள் தானே என்று அந்த பெண் மீண்டும் கேட்டதற்கு, "வருவதற்கு மனமில்லை" என்று பதிலளித்துள்ளார்.

இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை அந்த பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர, அந்த டிரைவரின் பதில் பலரையும் கவர்ந்துள்ளது. அவரது இந்த பதிலை 'உண்மையான பதில்' என்றும் பாராட்டி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?