TCS  Twitter
இந்தியா

"ஆபிஸுக்கு வாங்கப்பா" மில்லினியல்களோடு மல்லுகட்டும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

Gautham

மனித இனம் கண்டுபிடித்த விஷயங்கள் பல காலங்களில் பல பரிணாமங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் அலுவலகம் செல்லும் பழக்கம் மட்டும் கிட்டத்தட்ட கடந்த பல தசாப்தங்களாக பெரிய அளவில் மாறாமல் இருந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்ட போது, கிட்டத்தட்ட எல்லா அலுவலக ஊழியர்களும் தங்களின் வீடுகளிலிருந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

தொடக்கத்தில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது நல்லதா கெட்டதா..? வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லை... இணையம் வேகமாக இல்லை... அலுவலகத்தில் கிடைப்பது போல காபி டீ இல்லை, நண்பர்களுடனான செல்ல அரட்டைகள் இல்லை... என பலர் குறை கூறினாலும், மெல்ல மெல்ல மக்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பிடித்துப் போனது. குறிப்பாக 80களின் பிற்பகுதி மற்றும் 90களில் முற்பகுதியில் பிறந்த மில்லினியல்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ரொம்பவே பிடித்துப் போனது.

பலரும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பினர். இன்று, 2022ஆம் ஆண்டில் 8 மாதங்கள் நிறைவடைந்த பிறகும் பல அலுவலகங்களில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பல ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதிக்கவில்லை என நிறுவனங்களை மாற்றிய கதைகளை எல்லாம் இங்கே பார்க்க முடிகிறது. அதில் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸும் விதிவிலக்கல்ல.

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அலுவலகத்தில் இருப்பர். அதே போல ஒரு ஊழியர் தன்னுடைய 25 சதவீத நேரத்தை மட்டுமே அலுவலகத்தில் கழிப்பார் என ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தது. இதை 25 / 25 என்று அழைத்தது டிசிஎஸ்.

இத்திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் அதே டிசிஎஸ் நிறுவனம் தான், இப்போதைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை மெல்லக் கைவிட விரும்புகிறது. இதுநாள் வரை 20 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்குத் திரும்பியுள்ளனர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் டிசிஎஸ் தொடர்பாக விஷயம் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் மில்லினியல்கள். இதில் பெரும்பாலானோர் பெருநகரங்களை விடுத்து, செலவுகள் மற்றும் பயண நேரத்தை மிச்சப்படுத்த தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இப்போது அவர்களை அலுவலகத்துக்கு அழைத்தால், ஏன் 25 / 25 திட்டத்தை ஒத்திவைக்கிறீர்கள் என நிர்வாகத்தைக் கேள்விகேட்கத் தொடங்கியுள்ளனர். அதோடு அத்திட்டத்தை விரைவாக அமல்படுத்துமாறும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல்பட்டு அதிகாரியோ வீட்டிலிருந்தே வேலைபார்ப்பது மட்டுமே ஒரே வழியாக எடுத்துக் கொள்ள முடியாது. வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்கு வரத் தொடங்கிவிட்டனர் என்று கூறியுள்ளார் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஓஓ கணபதி சுப்ரமணியன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?