World Cup 2023: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் - இந்திய அணிக்கு சிக்கலா? twitter
இந்தியா

World Cup 2023: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் - இந்திய அணிக்கு சிக்கலா?

இந்திய அணி சென்னை வந்ததில் இருந்தே அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் விளையாடாமல் போகும் நிலையில், அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Keerthanaa R

இந்திய அணி வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் இந்திய அணியின் உலகக்கோப்பை முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. முதல் போட்டி, நேற்று (அக்டோபர் 5ஆம் தேதி) நடந்து முடிந்தது.

இதில் இங்கிலாந்து அணியும், கடந்த ஆண்டு இறுதி போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியும் மோதியது.

நேற்றைய போட்டியில், 9 விக்கெட்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து.

இந்திய அணியின் முதல் போட்டி வருகின்ற அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி சென்னை வந்ததில் இருந்தே அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் விளையாடாமல் போகும் நிலையில், அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு அடுத்ததாக இஷான் கிஷன், அல்லது கே எல் ராகுல் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, 8ஆம் தேதி நடைபெறும் போட்டியில், இவர் இடம்பெறுவாரா என்பதனை பிசிசிஐ முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 போட்டிகளில் மட்டுமே 1230 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில், இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தொடங்கிய கில், இதுவரை, 6 சதங்கள் அடித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?