உலகின் மிக உயரமான சிவன் கோயில் இதுதான்! இந்தியாவில் எங்கு இருக்கிறது தெரியுமா? Twitter
இந்தியா

உலகிலேயே உயரத்தில் இருக்கும் சிவன் கோயில் இதுதான்! இந்தியாவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

Priyadharshini R

உலகின் மிக உயரமான சிவன் கோவிலான துங்கநாத் கோயில் 5 முதல் 6 டிகிரி வரை சாய்ந்துள்ளதாக, இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) சமீபத்திய ஆய்வின்படி, உத்தரகாண்டின் புகழ்பெற்ற துங்கநாத் கோயில் 5 முதல் 6 டிகிரி சாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இமயமலையின் கர்வால் பகுதியில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 12,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இக்கோவில் உலகின் உயரமான சிவன் கோவில் ஆக அறியப்படுகிறது

தற்போதைய நிலவரப்படி, ஏஎஸ்ஐ அதிகாரிகள் இந்த கோவில் குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்து, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.

இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி கோவில் சாய்ந்து வருவதால், அதை சோதிக்கவும் தனி குழு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

"மினி சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் துங்கநாத், உலகின் மிக உயரமான சிவன் கோயிலையும் கொண்டு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த ஆலயம் ஒரு புனிதத் தலமாகவும், பிரமிக்க வைக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளும் பார்வையாளர்களும் திரளுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?