Passport Twitter
இந்தியா

பாஸ்போர்ட் தரவரிசை : உலகில் சக்திவாய்ந்தது எந்த நாடு? இந்தியாவின் இடம் என்ன?

ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் தான் மிகவும் குறைந்த நாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது. வெறும் 27 நாடுகளில் மட்டுமே ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கு எளிய அனுமதி வழங்கப்படுகிறது.

NewsSense Editorial Team

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசையானது கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாகப் பல ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட் மதிப்பானது சரிவைச் சந்தித்திருக்கிறது. ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மதிப்பிடப்பட்டுள்ளன.

குடியேற்ற ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் மதிப்பீட்டின்படி, ஒரு ஜப்பானிய பாஸ்போர்ட் 193 நாடுகளுக்குள் தொந்தரவு இல்லாமல் நுழைய முடியும். சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவின் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்குள் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் செல்ல முடியும்.

ரஷ்யப் பயண ஆவணங்கள் 50 வது இடத்தில் உள்ளன. ரஷ்யாவின் பாஸ்போர்ட்டை வைத்து 119 நாடுகளுக்கு எளிதாகச் செல்லலாம். 80 நாடுகளுக்கான எளிய அணுகலுடன் சீனா 69 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில், இந்தியாவின் பாஸ்போர்ட் 87 வது இடமே கிடைத்திருக்கிறது.

இவற்றில், ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் தான் மிகவும் குறைந்த நாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது. வெறும் 27 நாடுகளில் மட்டுமே ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கு எளிய அனுமதி வழங்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு வரை, உலகின் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 பாஸ்போர்ட்டுகளில் ஒரு ஆசிய நாடு கூட இடம்பெறவில்லை. இப்போது ஐரோப்பாவின் ஆதிக்கம் படிப்படியாகத் தளர்ந்து, ஜெர்மனி கூட தென் கொரியாவைப் பின்தொடருகிறது. 187 நாடுகளுக்கான அணுகலுடன் இங்கிலாந்து ஆறாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் அமெரிக்கா 186 நாடுகளுக்கான அனுமதியைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. இவை யாவும் சமீபத்திய தரவரிசையின் படி ஆகும்.

17 வருடத் தரவுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த தரவரிசைப் பட்டியல், பணக்கார தனிநபர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் உலகெங்கிலும் உள்ள குடியுரிமைகளின் மதிப்பை மதிப்பிட உதவுகிறது. அதன் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் அதிக விசா நெருக்கடி இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை வழங்குகின்றன. இருப்பினும், உலகளாவிய பயணம் இன்னும் கோவிட் கட்டுப்பாடுகளிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவரும்போது வைத்திருக்க வேண்டிய சிறந்த ஆவணங்களின் ஒரு கற்பனையான தரவரிசையாக மட்டுமே இது இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?