இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.
பாலியல் வழக்கில் பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் சிக்கியது முதல் மல்யுத்த வீர்ரகள் அவருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சை சிங் சமீபத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி வழங்கினார். தொடர்ந்து பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர் விரேந்திர சிங் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி வழங்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், தேசிய அளவிலான யு-15, யு-20 மல்யுத்த போட்டிகள் இந்த மாத இறுதியில் நடைபெறும் என விதிகளுக்கு புறம்பாக சஞ்சய் சிங் அறிவித்ததற்காக புதிதாக அமைந்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தை அவசரமாக சஸ்பெண்ட் செய்துள்ளது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust