Deepinder Goyal Twitter
இந்தியா

Zomato: "இதுவரை யாரும் கண்டுபிடித்ததில்லை" ஊழியர் சீருடையில் உணவு டெலிவரி செய்யும் சிஇஓ!

இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி தான் சமீபத்தில் தீபிந்தருடன் உரையாடியபோது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த மூன்று வருடங்களாக தீபிந்தர் இதை செய்து வருவதாகவும் தெரிவித்தார் சஞ்சீவ்

Keerthanaa R

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் நிறுவன சீருடையில் சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறார் பிரபல சோமேட்டோ நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல்.

இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி தான் சமீபத்தில் தீபிந்தருடன் உரையாடியபோது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த மூன்று வருடங்களாக தீபிந்தர் இதை செய்து வருவதாகவும் தெரிவித்தார் சஞ்சீவ்

பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் ஊழியர்களுடனான உறவை மேம்படுத்திக்கொள்ளவும், இதன் விளைவாக நிறுவனம் சரி வர செயல்பட்டு வரவும் பல விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் சோமேட்டோ சிஇஓ வின் இந்த நடவடிக்கை பலரது பாராட்டை பெற்று வருகிறது.

தீபிந்தருடனான தன் உரையாடலை பற்றி சஞ்சீவ் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "இப்போது தான் சோமேட்டோ குழுவையும், தீபிந்தரையும் சந்தித்தேன்.

தீபிந்தர் உட்பட, நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் அனைவரும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்து, தங்களது மோட்டர் சைக்கிளில் ஏறி சென்று ஒரு நாள் முழுவதும் உணவு டெலிவரி செய்கிறார்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

ஒவ்வொரு மூன்று மாதமும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. மேலும், இதுவரை தன்னை யாரும் அடையாளம் கண்டதில்லை என தீபிந்தர் தெரிவித்தார்" என்று பதிவிட்டிருந்தார் சஞ்சீவ்

இது தங்கள் நிறுவனம் குறித்த மக்களின் பார்வையை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது என்கின்றனர் சோமேட்டோ குழு.

"வாடிக்கையாளர்கள், பிசினஸ் பார்ட்னர்களை புரிந்து கொள்ள இது உதவுகிறது. வரிசையில் காத்திருந்து ஒரு வழக்கமான வாடிக்கையாளர் போல முன்னணி ஊழியர்களுடன் பேசுவது, கற்பனையான பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடுவது, உடனுக்குடன் வாடிக்கையாளர் ஃபீட்பேக்கை பெறுவது ஆகியவற்றில் மகிழ்ச்சி கிடைக்கிறது. வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள், கஸ்டமர்களின் உண்மையான கருத்துகளை பெற இவ்வாறு செய்வது முக்கியம்"என்று ஒரு டிவிட்டர் பயனர் கூறினார்.

சில தினங்களுக்கு முன் ஸ்விக்கி நிறுவனம் மூன்லைட்டிங் பாலிசிக்கு தங்கள் ஊழியர்களுக்கு அனுமதியளித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதற்கு முன்னர் ஊபர் நிறுவன தலைவரும் இதேபோல கேப் டிரைவராக வந்து வாடிக்கையாளர்களை ஸ்ர்ப்ரைஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?