உத்தர பிரதேசம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு நாளை திறக்கப்படவுள்ளதாக ஒரு பாலத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சிலர் யோகி ஆதித்யநாத் ஆட்சியைப் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் உண்மையாகவே இந்த இந்த பாலம் யோகி ஆதித்யநாத் கட்டியது தானா இல்லை அத்தனையும் வதந்தியா என்பதைக் காணலாம்.
புகைப்படத்தில் இருக்கும் இந்த பாலம் ரோலர் கோஸ்டர் பாலம் என அழைக்கப்படுகிறது.
கூகுள் ரிவர்ஸ் சர்சில் பதிவிட்ட போது, இந்த உலகப் புகழ்பெற்ற பாலம் சீனாவிலுள்ள குய்யாங் பகுதியில் உள்ள Qianchun interchange எனத் தெரிந்தது.
ஆனால் உத்தரபிரதேசம் அரசு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம் பாலங்கள் கட்ட முடிவு செய்திருப்பது உண்மையே.
மொத்தமாக 546 பாலம் கட்ட 4350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற சிக்கலான பாலங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த 546 பாலங்களில் பெரும்பாலனவை சிறிய பாலங்களே. லக்னோ பிரிவில் 6, மொரதாபாத் பிரிவில் 3, பரேலி பிரிவில் 5, பிரயாக்ராஜ் பிரிவில் 3 என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான பெரிய பாலங்கள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும்.
சில நாட்களுக்கு முன்னர் லக்னோ சாலையில் திடீரென விழுந்த குழி ட்ரெண்ட் ஆனது. இது போன்று உருவாகும் குழிகளை அடைத்து வருவதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது என்றாலும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust