தமிழ் Twitter
இந்தியா

தமிழ்தான் மலையாளிகள் கற்க வேண்டிய மொழி - வைரலாகும் எழுத்தாளர் பதிவு

மலையாளம், தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம்.

NewsSense Editorial Team

மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மலையாளம், தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உருவாவதை நாம் காணலாம்.

பெரும்பாலான தொழில்நுட்பச் சாதனங்கள் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வருகின்றன என்பது நமக்குத் தெரியும். எதையுமே புதிதாகக் கண்டுபிடிக்காமல் பழங்காலப் பெருமையின் வீண்பேச்சுக்களில் ஈடுபட்டு, வெளிநாட்டுத் தொழில் நுட்பங்களை வெட்கமே இல்லாமல் வாங்கிப் பயன்படுத்துபவர்கள் நாம்.

அந்த சாதனத்தின் பெயரில்கூட நமக்கு எந்த உரிமையும் இல்லை! ஆனால் அச்சாதனங்களுக்கு தமக்கென்று ஒரு பெயரையாவது வைக்க முயலும் மொழி தமிழ். Refrigeratorக்கு எளிதாக குளிர்சாதனப் பெட்டி என்று பெயர் வைக்கிறார்கள். Air Conditionerக்கு குளிரூட்டி. கேட்டாலே ஊட்டிபோல் குளிர்கிறது அல்லவா? Mobile Phoneக்கு அலைபேசி. Computerக்கு கணினி, Calculatorக்கு கணிப்பான்.

மேலும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?