high heel
high heel  Canva
Long Read

ஹை ஹீல்ஸ் : உண்மையில் ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதா? - வியக்க வைக்கும் கதை

NewsSense Editorial Team

நாட்டுக்கு நாடு பெண்களின் உயரம் வேறுபடுகிறது. ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமான உயர வேறுபாடு இன்றும் எல்லா இடங்களிலும் நீடிக்கிறது. ஓரிரு விதிவிலக்குகள் தவிர உலக சினிமாக்களில் நீங்கள் உயரம் கூடிய நாயகி, அவர்களை விட உயரம் குறைந்த நாயகனை பார்க்கவே முடியாது.

பெண்களின் சராசரி உயரத்திற்கும் கீழே உயரம் குறைவாக இருந்தால் அதுவே அந்தப் பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. முகக் கண்ணாடியில் பார்த்து முகத்தை அழகுபடுதுவது போல காலணி கடைகளில் ஹை ஹீல்ஸ் எனப்படும் உயர குதிகால் செருப்புகளையும் அவர்கள் மெனக்கெட்டு தேட வேண்டியிருக்கிறது.

இன்று பெண் குழந்தைகள் முதல், வளர்ந்தவர்கள் வரை பெண்கள் காலணி என்றாலே அது கொஞ்சமாவது உயர குதிகால் கொண்டிருக்கும் என்றாகி விட்டது

இப்படி உயர குதிகால் செருப்பு போடும் பழக்கம் எங்கு எப்படி உருவானது? அதன் வரலாறு சுவராசியமானது.

ஆண்களிடமிருந்து தோன்றிய பழக்கம்

ஆண்களுக்கான செருப்பில் உயர குதிகால் வகைகள் அதிகம் இருப்பதில்லை. அநேக ஆண்கள் தட்டையான காலணிகளையே அணிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் உயர குதிகால் காலணிகளை அணியும் போக்கு ஆண்களிடமிருந்துதான் தோன்றியது, பெண்களிடமிருந்து அல்ல.

உயர குதிகால்களின் தோற்றம் குதிரை சவாரி செய்பவர்கள் மற்றும் வீரர்களிடமிருந்தே தோன்றியது என்று பாத மருத்துவரும், காலணி வரலாற்று ஆசிரியருமான கேமரூன் கிப்பன் கூறுகிறார்.குதிரை சவாரி செய்யும் கௌ பாய்களோ(Cow Boy) இல்லை வீரர்களோ இவர்கள் சமூகத்தின் சாதாரண மக்களின் பிரிவுகளையே பிரதிநிதித்துவம் செய்தார்கள். இவர்களிடமிருந்து தோன்றிய உயர குதிகால் ஷூக்கள் அணியும் பழக்கம் விரைவிலேயே பணக்காரர்களுக்கும் பரவியது. முக்கியமாக நாடாளும் மன்னர்கள் அப்படி உயர குதிகால் காலணிகளை அணிவதை நாகரீகமாக பார்க்கத் துவங்கினர்.

உயர குதிகால் போக்கு சிறந்தது என்று எப்படி தோன்றியது?

16 ஆம் நூற்றாண்டில் கேத்தரின் டி மெடிசி என்ற பெண் ஒரு உயர குதிகால் ஷூ அணிந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் நிகழ்வாகும். அந்தப் பெண்ணின் உயரம் 150 சென்டி மீட்டர் என்பதால் அவள் திருமணத்திற்காக தனது உயரத்தை அதிகரித்து தோற்றமளிக்க விரும்பினாள்.

அக்காலம் வரை பெண்கள் பிளாட்ஃபார்ம் ஷூக்களையே அணிந்து வந்தனர். பிளார்ட்ஃபார்ம் ஷூக்கள் எனப்படுவை விருந்துகளுக்கும், சிறப்பு நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லும் சிறப்பான காலணி வகையாகும். இவை மேடைகளில் அணியும் ஷூக்களாவும் இருந்திருக்கின்றன. இவற்றை அன்றாடம் அணிய மாட்டார்கள். இன்றும் இந்த வகை காலணிகளை அதிகம் அணிவதில்லை என்றாலும் மேடையில் தோன்றும் கலைஞர்கள் இத்தகைய சிறப்பான பிளார்ட்ஃபார்ம் ஷூக்களை அணிவது வழக்கம்.

பிளாட்ஃபார்ம் காலணிகள்

16ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் இந்த பிளார்ட்ஃபார்ம் ஷூக்களின் சில வகைகள் 60 சென்டிமீட்டர் உயரம் கூட இருந்திருக்கின்றன. இதனாலேயே இந்த வகை ஷூக்களை அணியும் பெண்கள் அடிக்கடி கீழே விழுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் இப்படி விழுவதாலேயே கருச்சிதைவுகளையும் சந்தித்து வந்தார்கள்.

அதற்காகவே கர்ப்பிணிப் பெண்கள் இந்த பிளாட்ஃபார்ம் காலணிகளை அணிவது சட்டப்பூர்வமாகவே பல இடங்களில் அப்போது தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது இருக்கும் உயர குதிகால் காலணிக்கும் பிளாட்ஃபார்ம் காலணிக்கும் உள்ள வேறுபடு என்ன? பிளாட்ஃபார்ம் காலணிகள் முழுவதுமாகவே உயரமாக இருக்கும்.

உயர காலணிகளில் பாதுகாப்பு

காலணி தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு உயரம் அதிகமான காலணிகளை கொடுக்க முடியுமென்று உணர்ந்தாலும் அந்த காலணிகள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என்ற தேவையையும் புரிந்து கொண்டார்கள்.

எனவே அவர்கள் பிளாட்ஃபார்ம் ஷூக்களின் முன்புறம் தரையோடு ஒட்டிய விதமாகவும் நடுவில் வளைத்து பின்புறம் அதாவது குதிகால்கள் படும் இடத்தின் உயரத்தை கூட்டி பாதத்திற்கு பொருத்தமாக தயாரித்தார்கள். இதனால் அந்த காலணிகள் அணிந்து நடக்கும் போது அதிக ஒலி எழுப்பும். இப்படித்தான் உயர குதிகால் காலணிகள் பிறந்தன.

200 வருடங்கள் கழித்து பிரான்ஸை லூயிஸ் 14 மன்னன் ஆளும் போதுதான் உண்மையிலேயே உயர குதிகால் போடும் பழக்கம் பரவலாக தோன்றியது. ஆனால் இப்போதும் அது பெண்களிடமிருந்து துவங்காமல் ஆண்களிடமிருந்துதான தோன்றியது. பெண்கள் உயரம் குறைந்த காலணிகளை அணியும் போது ஆண்கள் உயரம் அதிகம் கொண்ட குதிகால்கள் அணிவதை விரும்பினார்கள். பிரான்ஸ் நாட்டு மன்னன் லூயிஸ் 14 ஒரு உயர குதிகால் வகைக்கு தன்னுடைய பெயரையே வைத்தார். அந்த அளவு ஆண்களுக்கு உயர குதிகால் மோகம் இருந்தது.

அரச குடும்பம், மேல் தட்டு மக்களின் நாகரீகம்:

மன்னன் லூயிஸ் 14 அணியும் உயர குதிகால் காலணி காலுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதோடு அவை மிகவும் அலங்காரத்தோடு காட்சியளிக்கும். அவரது சிவப்பு உயர குதிகால் காலணி மரியாதைக்குரிய காலணியாக கருதப்பட்டது. அவரைத் தவிர அவரது தர்பாரில் வேறு யாரையும் இப்படி உயர குதிகால அணிவதை அவர் அனுமதிக்க மாட்டார். மீறி அணிந்தால் அணிபவரின் தலை இருக்காது எனும் நிலை அப்போது இருந்தது.

மேலும் அக்காலத்தில் நாகரீகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். சாதாரண மக்களைப் பொறுத்தவரை இந்த அலங்காரங்கள், குதிகால் செருப்புகள் எவையும் பிரச்னை இல்லை. அவர்களுக்கு அவை தேவையுமில்லை. ஆனால் அரச குடும்பங்களும், அதிகார வர்க்கத்னிரும், இதர மேல் தட்டு பிரிவினரும் அக்காலத்தில் ஒருவரையொருவம் விஞ்சும் நாகரீகத்தை காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் எல்லா நாடுகளிலும் அரச குடும்பத்தை பின்பற்ற முயற்சிப்பது அரசருக்கு எதிரானது என்றே கருதப்பட்டது.

இறுதியில் உயர குதிகால் காலணிகள் அணியும் உரிமை அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காலணிகள் உருவாவதற்கு மக்கள் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை காத்திருக்க நேர்ந்தது.

உயர குதிகால் காலணியின் தொழில் நுட்பத்தை கண்டு பிடிப்பதற்கு இரண்டு உலகப் போர்கள் முடிய வேண்டியிருந்தது. உயர குதிகாலை ஸ்டைலெட்டோ குதிகால் என்றும் அழைப்பார்கள். இவை 2.5 சென்டிமீட்டரிலிருந்து 25 சென்டி மீட்டர் வரை உயரத்தில் வேறுபடும்.

ஸ்டைலெட்டோ தொழில்நுட்பம் என்றால் என்ன?

இதன்படி காலணிகளின் உட்புறத்தில் ஒரு சிறிய உலோகத் துண்டு இருக்கும். இதன் மூலம் காலணியின் குதிகால் பகுதி மற்றும் பாதத்தின் முன்பகுதி தனித்தனியாக இயங்கும். இரண்டுக்கும் நடுவில் உள்ளப் பகுதி வளைந்து திரும்பும் வண்ணம் இருக்கும். இப்படித்தான் இன்றைய உயர குதிகால் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கு முன்னரும் குதிகால் காலணிகள் வளைந்தாலும் இப்போதுதான் கால்கள் அதற்கு பொருத்தமாக இருந்ததோடு அந்த ஷூக்களை எந்த நிலையிலும் பயன்படுத்தலாம் எனும் நிலை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் உயர குதிகால் ஷூக்கள் மேடையை துளைத்து விடும் வண்ணம் கூர்மையாக இருந்தன. அதே போன்று இந்த உயர குதிகால் காலணிகளை அணிவது கால்களுக்கு உகந்ததா என்ற விவாதமும் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவத்தில் உயர குதிகால் அணிவதால் முதுகுவலி, கால் வலி வரும் என்பதற்கு ஆதரமில்லை என்று பாத மருத்தவர் கிப்பன் கூறுகிறார்.

இப்படியாக ஆண்களிடமிருந்த ஆரம்பித்த உயர குதிகால் காலணிகள் இன்று அறிவியல் பூர்வமாக பெண்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் பொருத்தமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுகிறது. அதனால் உயரம் குறைந்த பெண்களின் தாழ்வு மனப்பான்மையை உயர குதிகால் காலணிகள் சாதராணமாக போக்கி விடும் என்றால் அது மிகையில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!