சந்திராயன் 3: ஆதித்யா டு சுக்ரயான் - இஸ்ரோவின் 5 மிகப் பெரிய திட்டங்கள் பற்றி தெரியுமா? Twitter
அறிவியல்

சந்திராயன் 3: ஆதித்யா டு சுக்ரயான் - இஸ்ரோவின் 5 மிகப் பெரிய திட்டங்கள் பற்றி தெரியுமா?

இஸ்ரோவின் மாபெரும் இலக்கு சந்திராயன் 3 அல்ல. இது முதல் அடிதான். இஸ்ரோவின் செக் லிஸ்டில் இன்னும் 5 மிகப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன.

Antony Ajay R

சந்திரான் 3 வெற்றிகரமாக விண்ணுக்கு புறப்பட்ட காட்சிகள் நம் உதடுகளில் பெருமைமிக்க புன்னகையை விதைத்தது.

உலக அரங்கில் தன்னை முன்னேறிய நாடாக நிலைநிறுத்தவும், நிலவைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் மனித வாழ்க்கையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இஸ்ரோவின் மாபெரும் இலக்கு சந்திராயன் 3 அல்ல. இது முதல் அடிதான்.

இஸ்ரோவின் செக் லிஸ்டில் இன்னும் 5 மிகப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன.

நிலவு மட்டுமல்லாமல் சூரியனையும், செவ்வாய், வெள்ளி கிரகங்களையும் இஸ்ரோ ஆய்வு செய்ய உள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. எதிர்காலத்தில் உலகையே வியப்பில் ஆழ்த்தவிருக்கும் இஸ்ரோவின் 5 திட்டங்கள் குறித்து எளிமையாக காணலாம்.

ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தயார் செய்துவரும் விண்கலம் ஆதித்யா எல்-1.

அமெரிக்காவின் நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து 4வது விண்வெளி அமைப்பாக சூரியனை ஆய்வு செய்கிறது இஸ்ரோ.

ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவு வரை சென்று சூரியனை ஆராயும்.

சூரிய காற்று, சூரியனின் காந்தபுலம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

ககன்யான்

இஸ்ரோவின் தற்போதைய மாபெரும் இலக்காக இருப்பது ககன்யான் திட்டம் தான். விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக அழைத்து வருவது தான் ககன்யான் திட்டம்.

2007ம் ஆண்டே இந்த திட்டத்தை இந்தியா வடிவமைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.

2017ம் ஆண்டு வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையக் கூடிய ஜி.எஸ்.எல்வி 2 ராக்கெட் வெற்றிக்கு பிறகு, இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மீண்டும் தள்ளிப்போன இந்த திட்டத்தை 2024ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்க வான்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளித்துவரப்படுகிறது.

மங்கள்யான் 2

ஒரு ஹாலிவுட் படத்தை விட குறைவான நிதியில் உருவாக்கப்பட்ட விண்கலம் மங்கள்யான்.

வெற்றிகரமாக 8 ஆண்டுகள் செவ்வாய் கிரகம் குறித்த பல தகவல்களை நமக்கு வழங்கியது. உலகையே திரும்பிப்பார்க்க வைத்த திட்டம் மங்கள்யான்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாக இருந்த மங்கள்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா பிரான்ஸ் நாடுகள் எதிர்காலத்தில் செய்யும் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என விண்வெளி ஒத்துழைப்புக் கொள்கையின் படி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுக்ரயான்

பிரான்ஸுடனான ஒத்துழைப்பு கொள்கையில் வெள்ளி கோளை ஆய்வு செய்வதற்கான திட்டமும் உள்ளது.
அதற்கான திட்டம் தான் சுக்ரயான். 2012ம் ஆண்டு இந்த திட்டத்துக்கான ஐடியா உருவானாலும். 2017ம் ஆண்டு தான் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
கொரோனாவால் முடங்கிய ஆய்வுகள், இஸ்ரோவின் பிறதிட்டங்கள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட 2031ம் ஆண்டு வரை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

நிசார்

நாசாவும் இஸ்ரோவும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் இதுவாகும். இதற்கான செயற்கைக்கோள் ஏற்கெனவே இந்தியா வந்தடைந்துவிட்டது.
2024ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது பூமியைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்கை கோளாகும்.
பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பனிப்பாறைகள், காடுகள், கடல்மட்ட உயர்வு, நிலத்தடி நீர், நில நடுக்கம், சுனாமி, எரிமலை, நிலச்சரிவு பற்றி தகவல்களை இது வழங்கவிருக்கிறது.

நிசார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?