செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதில் விஞ்ஞானிகள் இன்று வரை தீவிர முயற்சியில் தான் இருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நாசாவின் புதிய ஆய்வக சோதனையின் முடிவில், எலியன்களின் வாழ்க்கை பற்றிய தடயங்களைக் கண்டறிவதற்கு, ஒரு புதிய உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்பது தெளிவாகியிருக்கிறது.
அந்த ஆய்வின்படி, செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைச் சேகரிக்க, அதன் மேற்பரப்பில் குறைந்தபட்சம் 6.6 அடி அல்லது அதற்கு மேல் ரோவர்ஸ் தோண்ட வேண்டும்.
ரோவர்ஸ் அப்படித் தோண்டி, அமினோ அமிலத்தின் தடயங்களைக் கண்டுபிடித்தால், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தன என்பதற்கான வலுவான ஆதாரமாக அது அமையும். ஆனால், அவ்வாறு எந்த தடயமும் கிடைக்காததால், அங்கே காஸ்மிக் கதிர்களின் தாக்கத்தால் ஆதாரங்கள் யாவும் அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆஸ்ட்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் விஞ்ஞானிகள் முன்பு மதிப்பிட்டதை விட வேகமாக சேதமடையும் என்று கூறியுள்ளது.
"செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் உள்ள அமினோ அமிலங்கள் காஸ்மிக் கதிர்களால் அழிக்கப்படுவதாகவும், முன்பு நினைத்ததை விட மிக வேகமான விகிதத்தில் அமினோ அமிலங்கள் அழிக்கப்படுவதாகவும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் அலெக்சாண்டர் பாவ்லோவ் கூறினார்.
"தற்போதைக்கு மார்ஸ் ரோவர்கள், சுமார் இரண்டு அங்குலங்கள் (சுமார் ஐந்து சென்டிமீட்டர்கள்) வரை மட்டுமே துளையிடுகின்றன.
அந்த ஆழத்தில் உள்ள அமினோ அமிலங்களை முற்றிலுமாக சிதைவதற்கு 20 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகும். காஸ்மிக் கதிர்களோடு, பெர்குளோரேட்டுகள் மற்றும் நீர் சேர்வது அமினோ அமில அழிவின் விகிதத்தை மேலும் அதிகரிக்கிறது” என்றார்.
மேலும், ”இந்த பணியை செய்து முடிப்பதற்கு 10 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளான மாதிரிகளை சேகரித்தால் மட்டுமே, செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த உயிர்களைப் பற்றிய ஆய்வுக்கு உதவிக்கரமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust