மனிதர்களின் வியர்வை மற்றும் சுவாசத்திலிருந்து அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை நாய்கள் அறிந்துகொள்ள முடியும் என அயர்லாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மன அழுத்தம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான ஒன்று.
மனிதனுக்கு மன அழுத்தம் என்பது பல காரணங்களால் ஏற்படும். சுற்றி இருப்பவர்களிடமிருந்து வரலாம் அல்லது நம் உடலில் இருந்தே வரலாம்.
மனிதனின் கையை மீறி சில விஷயங்கள் நடக்கும்போது உண்டாகும் மன அழுத்தத்தைச் சமாளிப்பது எளிதல்ல. இதனை மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் நாய்கள் மனிதர்களின் மன அழுத்தத்தை உணர முடியுமா? என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிளாரா வில்சன் மற்றும் கெர்ரி கேம்ப்பெல் ஆகியோரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. PLOS One என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வினை மேற்கொள்ள, மனிதர்களின் வியர்வை மற்றும் சுவாசத்தின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர்.
வேலை செய்வதற்கு முன் இருந்த நிலையையும், அதற்குப் பின் இருந்த மன அழுத்தத்தை அவர்களே ரிப்போர்ட் செய்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் அந்த நபரின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்த மாதிரிகளை மட்டுமே இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொண்டனர். நாய்களுக்கு வாசனை வரிசையை எவ்வாறு தேடுவது என்று கற்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு சோதனை அமர்விலும், நாய்க்கு ஒரு நபரின் சாதாரணமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட மாதிரிகளும், மனஅழுத்ததின் போது எடுக்கப்பட்ட வியர்வை மாதிரிகளும் வழங்கப்பட்டன.
அவைகளுக்கு நான்கு நிமிட இடைவெளி மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நபரின் மன அழுத்த மாதிரிக்கு நாய்களின் வெவ்வேறான பாவனைகளை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடிந்தது.
குயின்ஸில் உள்ள ஸ்கூல் ஆஃப் சைக்காலஜியில் பிஎச்.டி மாணவியான கிளாரா வில்சன் இது குறித்து கூறுகையில்,
"மனிதர்களாகிய நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது வியர்வை மற்றும் சுவாசத்தின் மூலம் வெவ்வேறு வாசனைகளை உருவாக்குகிறோம்." என்றார்
மனித மன அழுத்தத்தை உணர நாய்களுக்கு வீடியோ அல்லது ஆடியோ குறிப்புகள் தேவையில்லை, மாறாக
சுவாசம் மற்றும் வியர்வை போதும் அதனைக் கண்டறிய என்பதற்கு இந்த ஆய்வே சான்று என்கிறார்.
மேலும் மனித-நாய் உறவில் எவ்வளவு புரிதல் உள்ளது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
நாய்கள் அதிக உணர்திறன் கொண்டவை மற்றும் உள்ளுணர்வுள்ள உள்ள விலங்கும் கூட. அனைவரின் பிரியமான பிராணியாக இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust