glass octopus Twitter
அறிவியல்

Glass Octopus: இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கடல்வாழ் உயிரினம்!

Keerthanaa R

,பார்ப்பதற்கு கண்ணாடிப் போல இருக்கும் ஆக்டோபஸ் மனிதர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயற்கை எப்போதும் மனிதர்களை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை. உயிரினங்கள், அதன் செயல்பாடுகள்,தோற்றம் என அனைத்திலும் உள்ள நுட்பங்கள் குறித்து காலம் காலமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிலும் முக்கியமாக கடல்வாழ் உயிரினங்கள், அதிக மர்மங்கள் நிறைந்தவை. அதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விஷயங்கள் இன்னும் கண்டறியப்படாதவை என்றும், வருடத்திற்கு ஒரு புதிய உயிரினம் கண்டறியப்படுகிறது என்றும் தரவுகள் சொல்கின்றன.

அந்த வகையில் புதிய வகை ஆக்டோபஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கண்ணாடி போன்ற தோற்றம் கொண்டுள்ளது. கண்ணாடி ஆக்டோபஸ் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. கண்களை தவிர இந்த ஆக்டோபஸ்ஸின் கண்கள், செரிமான பாதை மற்றும் கண் நரம்பை தவிர மற்றவை எல்லாமே கண்ணாடி போல இருக்கிறது.

முற்றிலும் டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கிறது அந்த ஆக்டோபஸ். அதன் உடல் முழுவதும் உள்ள மஞ்சள் நிற புள்ளிகள் இருளில் மின்னுகின்றன. அந்த ஆக்டோபஸ்ஸின் கைகளில் வெள்ளை நிற புள்ளிகள் இருக்கின்றன. இது பார்ப்பவர்களின் கண்களை கவர்கிறது.

தி ஆக்சிஜன் பிராஜெக்ட் தன் டிவிட்டர், பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 18000 பார்வைகளை கடந்து கவனம் பெற்று வருகிறது.

"கண்ணாடி ஆக்டோபஸ் (விட்ரெலெடோனெல்லா ரிச்சர்டி) என்பது உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நீரில் மிகவும் அரிதாகவே காணப்படும் செபலோபோட் ஆகும்.

இந்த அழகான உயிரினங்கள் சூரிய ஒளி அடையாத ஆழ்கடலில் காணப்படுகின்றன, " என்று வீடியோவில் தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கு டிவிட்டர்வாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?