Cryonics மரணத்தை வெல்ல முயலும் தொழில்நுட்பம் - இறந்தவர்களுக்கு உயிர் கிடைக்குமா? Twitter
அறிவியல்

Cryonics : மரணத்தை வெல்ல முயலும் தொழில்நுட்பம் - இறந்தவர்களுக்கு உயிர் கிடைக்குமா?

அல்கார் நிறுவனம் இதுவரை 199 மனித உடல்களும், 100 செல்லப் பிராணிகளையும் இந்த முறையில் பாதுகாத்து வருவதாக என்டிடிவி வலைதளம் சொல்கிறது. இவர்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்குமா?

NewsSense Editorial Team

உலகின் மிகப்பெரிய பணக்காரர், ஏழை, அரசியல்வாதி, வாக்காளன், நல்லவர், கெட்டவர்... என யாராக இருந்தாலும் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டால் சடலம் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

அந்த உடலால் எந்த பெரிய பயனும் இல்லை என்பதால் அவரவர்களின் மதம் அல்லது சமய நம்பிக்கைகளின் படி நல்லடக்கம் செய்வர் அல்லது எரியூட்டி அஞ்சலி செலுத்துவர். 

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, உயிர் பிரிந்த உடலை அறிவியல் ரீதியில் பத்திரமாக வைத்திருக்கும் பணியை, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அல்கார் லைஃப் எக்ஸ்டென்ஷன் ஃபவுண்டேஷன் (Alcor Life Extension Foundation) என்கிற நிறுவனம் செய்து வருகிறது.

லிண்டா மற்றும் ஃப்ரெட் சேம்பெர்லைன் (Fred Chamberlain) ஆகியோர் அல்காரை கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கினர். அல்கார் மனித உடலைப் பாதுகாக்க கிரயோனிக்ஸ் துறைசார்ந்த முறைகளைக் கையாள்கிறது.

One Year of Newssensetn

கிரயோனிக்ஸ் (Cryonics) என்றால் என்ன?

மனித உடலில் உள்ள குறிப்பிட்ட பாகங்கள் அல்லது ஒட்டுமொத்த மனித உடலையும் கடுங்குளிரில் உறைய வைப்பதையே கிரயோனிக்ஸ் என்கிறார்கள். 

கிரயோனிக்ஸ் முறையில் ஒரு உடல் பாதுகாக்கப்படுவதை கிரயோப்ரிசர்வ் (cryopreserve) என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

அல்கார் நிறுவனம் இதுவரை 199 மனித உடல்களும், 100 செல்லப் பிராணிகளையும் இந்த முறையில் பாதுகாத்து வருவதாக என்டிடிவி வலைதளம் சொல்கிறது.

ஒட்டுமொத்தமாக கடந்த 2021 ஏப்ரல் நிலவரப்படி அல்காரில் 1,832 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்களில் 182 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 116 பேரின் தலைகள் மட்டும் கிரயோ-ப்ரிசர்வ் முறையில் பாதுகாக்கப்படுவதாகவும் சில வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அல்கார் சேமித்து வைத்திருக்கும் நபர்கள் பெரும்பாலானவர்கள், இன்றைய அறிவியலால் முழுமையாக தீர்வு காண முடியாத புற்றுநோய், ஏ எல் எஸ் என்று அழைக்கப்படும் Amyotrophic lateral sclerosis... போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 

நோய்களுக்கு எல்லாம் முழுமையான தீர்வு காணப்பட்டு அறிவியல் இன்னும் பன்மடங்கு வளர்ந்திருக்கும் போது, எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த உடல்களில் உயிர் ஊட்டப்படும் என ஒரு தரப்பினர் நம்புகின்றனர்.

விட்ரிஃபிகேஷன் (vitrification):

ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேங்கில், திரவ நைட்ரஜந் ரசாயணத்தை நிரப்பி, அதில் மனித உடல்கலளைப் பாதுகாக்கிறார்கள். எனவே அதன் வெப்பநிலை சுமாராக மைனஸ் 196 டிகிரி ஷெல்சியஸாக இருக்கும். இதில் மனித உடலில் உள்ள உள் உறுப்புகளில் பனிக்கட்டி உருவாகி விடாமல் இருக்க மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையே விட்ரிஃபிகேஷன்.

மனித உடலுக்குள் இருக்கும் ரத்தம் உட்பட அனைத்து திரவங்களையும் வெளியே எடுத்துவிட்டு, அதற்கு பதில் ரசாயணங்களைச் செலுத்தி பாதுகாப்பதையே ஆங்கிலத்தில் விட்ரிஃபிகேஷன் என்கிறார்கள்.

அல்காரின் நோயாளிகள் யார்?

இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்படி கிரயோ-ப்ரிசர்வ் செய்யப்படும் நபர்களை நோயாளிகள் என்று அழைத்துக் கொள்கிறது அல்கார் நிறுவனம்.

அல்காரில் தாய்லாந்தைச் சேர்ந்த மதெர்ன் நவரத்பொங் (Matheryn Naovaratpong) என்கிற 2 வயதுப் பெண் குழந்தை தான் மிக இளம் வயது நோயாளி. மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். பல முறை மூளை அறுவை சிகிச்சை செய்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், அல்கார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் மகளின் உடலை பத்திரப்படுத்தியுள்ளனர்.

பிட்காயின் என்கிற கிரிப்டோகரன்சியின் முன்னோடிகளில் ஒருவரான ஹல் ஃபின்னேயும் (Hal Finney) அல்காரின் நோயாளிகளில் ஒருவர். கடந்த 2014ஆம் ஆண்டு அவர் சட்டப்படி காலமான பிறகு, அவரது உடலை அல்கார் பாதுகாத்து வருகிறது.

இதுவரை உலகம் முழுக்க சுமார் 500 பேர் தங்களின் உடலை கிரையோ-ப்ரிசர்வ் செய்ய தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வளவு பணம் தேவை?

அல்கார் நிறுவனம், ஒரு மனித உடலை கிரயோனிக்ஸ் முறையில் பாதுகாக்க 2 லட்சம் அமெரிக்க டாலரும், மனித மூளையை மட்டும் பாதுகாக்க 80,000 அமெரிக்க டாலரும் வசூலிப்பதாக என்டிடிவி வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. 

அல்கார் நிறுவனத்துக்கு அமெரிக்க மத்திய அரசு வரி விலக்கு வேறு அளித்துள்ளதாகச் செய்தி களில் பார்க்க முடிகிறது.

கடும் எதிர்ப்பு:

நம்மை நாமே உறைய வைத்துக் கொள்வது கிட்டத்தட்ட ஒரு அறிவியல் புனைவைப் போன்றது என நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மென் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கல்லூரியின் மருத்துவ நெறிமுறைகள் பிரிவின் தலைவர் ஆர்தர் கப்லன (Arthur Caplan) கூறியுள்ளார்.

எதிர்காலத்தைக் குறித்து ஆராய்பவர்கள், உங்களிடமிருந்து பணத்தைப் பெற விரும்புபவர்கள் மட்டுமே இத்திட்டத்தைக் குறித்து பெரிய ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார் ஆர்தர்.

Arthur Caplan

இப்படி மருத்துவ நெறிமுறைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... மனிதர்கள் இறந்த பின் அவர்கள் உடலைப் பல தசாப்தங்களுக்கு பாதுகாத்து வைத்து, அறிவியல் வளர்ச்சி அடையும் போது அவர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்தால் கூட, அவர்கள் சமாளிக்க வேண்டிய கள எதார்த்த பிரச்சனைகள் நிறைய இருப்பதாகச் சொல்கிறார்கள் இத்திட்டத்தைச் சந்தேகத்தோடு அணுகும் நபர்கள்.

உதாரணமாக ஒரு நபர், 2010ஆம் ஆண்டில் உயிரிழந்து, 2050-ல் உயிர்பெற்று வருகிறார் என்றால், அவரால் அந்த காலத்தை எப்படி சகஜமாக புரிந்து கொள்ள முடியும்... 2050ஆம் ஆண்டில் வாழும் மனிதர்கள், புதிதாக உயிர்பெற்று வந்த நபரை எப்படி அணுகுவார்கள், ஒட்டுமொத்த புறச் சூழல், தொழில்நுட்பம் என எல்லாமே மாறி இருக்கும் போது உயிர்பெற்று வந்த மனிதர்களால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

மருத்துவம், கள எதார்த்தத்தைத் தாண்டி, பல நீதிமன்ற வழக்குகளையும் அல்கார் சந்தித்துள்ளது. டோரா கென்ட் வழக்கு, பேஸ் பால் உலகத்தின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த டெட் வில்லியம்ஸ், ஜான் ஹென்றி வில்லியம்ஸ், மேரி ராபின்சன் வழக்கு எனப் பலவற்றை உதாரணமாகக் கூறலாம். 

இது சரியா தவறா என்பதைத் தாண்டி, பெரும் பணக்காரர்கள், வசதியானவர்கள் தொடர்ந்து அல்காரின் வாடிக்கையாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தான் இறந்த பிறகுத் தன் சொத்து பத்துகளை என்ன செய்ய வேண்டும் என எழுதி வைப்பது போல, தன் உடலை அல்கார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பல பெரும்புள்ளிகள் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பணத்துக்குப் பலன் கிடைக்குமா... உயிர்த்து எழுவார்களா... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?