Old Age Pexels
அறிவியல்

மனிதர்கள் இனி 150 ஆண்டுகள் வாழலாம் - புதிய ஆய்வு முடிவு

NewsSense Editorial Team

வயது குறைக்கும் ஆய்வில் உள்ள விஞ்ஞானிகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் முதல் மனிதன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறுகின்றனர். அதாவது இப்போது இருக்கும் குழந்தைகள் எதிர்கால விஞ்ஞான ஆய்வுகளின் வசதியால் அவர்கள் சுலபமாக 150 வயதைக் கடக்க முடியும் என்பது இதன் பொருள்.

70, 80 வயது ஆனாலே நாம் முதுமையின் இறுதிப் பருவத்தை உணர்கிறோம். அப்போது நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதே இப்போதைய எதார்த்தம். எதிர்காலத்தில் 150, 200 ஆண்டுகள் என மனிதர்கள் வாழ்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது சுவாரஸ்யமான ஒன்று. அதற்கேற்ற முறையில் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறலாம்.

Longer Life Span

தற்போது வாழும் மிக வயதான மனிதர் லூசில் ராண்டன். அவருக்கு 118 வயது மற்றும் 137 நாட்கள். ஆனால் கூடிய சீக்கிரமே 200 வயது வாழக்கூடிய மனிதர்கள் தோன்றுவார்கள் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். பிரான்சில் வசிக்கும் லூசில் ராண்டன் 1904 பிப்ரவரியில் பிறந்தார்.

ஆனால் ஆயுள் கணக்கை ஆய்வு செய்யும் உயிரியல் நிபுணர் ஒருவர் இந்த சாதனையை சில தலைமுறைகளில் வெல்ல முடியும் என்று கூறுகிறார். நீண்ட ஆயுள் மற்றும் நீண்ட காலம் வாழ்வது பற்றிய புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆண்ட்ரூ ஸ்டீன் ஊடகங்களிடம் கூறும் போது, ஒரு மனிதன் உண்மையில் 200 வயது வரை வாழ முடியாது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

Lucie Randon

மேலும் நாம் எவ்வளவு காலம் வாழ முடியும் எனக் கூறுமளவுக்கு நம் உயிரை பறிக்கும் எந்த தடையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.

"மனித ஆயுட்காலத்தின் மீது சில வகையான அடிப்படை வரம்புகளை முன்வைக்கும் ஆய்வுகள் ஒவ்வொரு சில வருடங்களுக்கும் வெளிவருகின்றன. ஆனால் அவை எப்போதும் ஒரு முக்கியமான பகுதியைக் கவனிப்பதில்லை. நாங்கள் இதற்கு முன் வயதான செயல்முறைக்கு சிகிச்சையளிக்க முயற்சித்ததில்லை என்பதுதான் அது”.

Longer Life Span

"மக்கள் 200 வயது வரை வாழ முடியாததற்கான உடல் அல்லது உயிரியல் காரணத்தை என்னால் பார்க்க முடியவில்லை - அதைச் சாத்தியமாக்கும் வகையில் உயிரியல் மருத்துவ அறிவியலை நாம் உருவாக்க முடியுமா என்பதுதான் சவால்." என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இருப்பினும் இந்த நீண்ட காலம் வாழும் மாஜிக் எப்படி நிகழும் என்பதை டாக்டர் ஸ்டீல் விளக்கவில்லை. அதை அவர் தனது புதிய புத்தகமான வர இருக்கும் Ageless: The New Science of Getting Older Without Getting Old எனும் நூலில் விளக்கலாம்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபர் ஜீன் கால்மென்ட் ஆவார். அவர் பிப்ரவரி 1875 இல் பிறந்து ஆகஸ்ட் 1997 இல் இறந்தார். இந்த மனிதர் மொத்தம் 122 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். 1897 இல் பிறந்து 2013 இல் இறந்து போன ஜிரோமன் கிமுரா மிகவும் வயதான ஆண் என்பதோடு ஆதாரங்களுடன் அவர் வயது நிரூபிக்கப்பட்ட நபர் ஆவார்.

ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஃபெடிசேவ் மூலக்கூறு இயற்பியல் விஞ்ஞானி ஆவார். அவர் செயற்கை நுண்ணறிவு உயிரியல் மருத்துவ நிறுவனமான ஜெரோவை நடத்துகிறார்.

இவரைப் பொறுத்தவரை இத்தகைய வாழ்க்கை நீட்டிப்பு என்பது அவர்களது ஆயுட் காலத்தை கூட்டினாலும் அவர்களது வாழும் வாழ்க்கைத்தரம் அதாவது உயிரியில் காரணிகள் குறையும் என்று கூறுகிறார். இதன் படி மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் செயலின்றி இருப்பார்கள். ஆக்டிவாக அவர்களால் வாழ முடியாது. இது முதுமை குறித்த பிரச்னை.

Old Age

அதன்படி முதுமையின் பிரச்னைகளை தீர்த்தால் மட்டுமே மனிதர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கு பயன்படும் என்று இவர் கூறுகிறார். இதை டாக்டர் ஸ்டீலும் ஒப்புக் கொள்கிறார். முதுமையின் அடையாளங்களை சமாளிப்பது என்பது நோய் அபாயம் முதல் அழகு சாதனப்பொருட்கள் வரை முழு வயதான செயல்முறையையும் பாதிக்கலாம். ஆய்வு செய்து இதை தடுக்கலாம். இதுதான் முதுமையை மாற்றும் மருத்துவத்தின் இலக்கு என்று டாக்டர் ஸ்டீன் கூறுகிறார்.

ஆக நீண்ட ஆயுளுடன் வாழ்வதும், முதுமையின்றி வாழ்வதும் வேறு வேறு இல்லை என்பது மருத்துவ உலகம் புரிந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டால் மனிதர்கள் இளமையோடு 200 ஆண்டுகள் வாழ முடியும். ஆனால் இப்போதைக்கு இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்களோ இல்லை நானோ இந்த பட்டியலில் இல்லை என்பது உண்மை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?