மிக மிக அரிதான Softshell ஆமை! கேரளத்தில் கண்டறிந்த பிரிட்டன் ஆய்வாளர்கள் Twitter
அறிவியல்

மிக மிக அரிதான Softshell ஆமை! கேரளத்தில் கண்டறிந்த பிரிட்டன் ஆய்வாளர்கள்

Antony Ajay R

உலகில் மிகவும் அரிதான ஆமை வகை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் உயிர்களை பாதுகாக்கும் ஆர்வம் கொண்டவர்களுடன் இணைந்து இங்கிலாந்தைச் சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழக ஆராச்சியாளர்களும் இதனைக் கண்டுள்ளனர்.

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவை சேர்ந்த சாஃப்ட்-ஷெல் ஆமைகள் தான் அது. இது அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது.

இந்த ஆமையை கேரளாவில் உள்ள சந்திரகிரி ஆற்றின் படுகையில் கண்டடைந்துள்ளனர்.

இந்த ஆமை இருக்கிறதா இல்லையா என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனை எவ்வளவு தேடியும் ஆதாரப்பூர்வமாக கண்டறியமுடியவில்லை. இந்தியாவின் பல்லுயிர்தன்மையை நம்பிய ஆய்வாளர்கள் இதனை தொடர்ந்து தேடினர்.

இறுதியில் கேரள ஊள்ளூர் மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்டு, ஆமையைக் கண்டறிந்தனர்.

இந்த பெரிய சாஃப்ட்ஷெல் ஆமைகள் 1 மீட்டர் நீளம் வரை வளரும். 100 கிலோ எடையை அடையக் கூடியது. ஆய்வாளர்கள் ஆமையின் இருப்பைக் கண்டறிந்ததுடன், அது இனப் பெருக்கம் செய்து முட்டையிட்டுள்ளதையும் பார்த்திருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?