விண்ணில் பறக்க தயாராகும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Twitter
அறிவியல்

விக்ரம்: விண்ணில் பறக்க தயாராகும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சுவாரஸ்ய தகவல்கள்

இந்த தனியார் ராக்கெட்டுக்கு, இந்திய விண்வெளித் துறையின் பிதாமகராகக் கருதப்படும் விக்ரம் சாராபாயின் நினைவாக 'விக்ரம் எஸ்' என பெயரிப்பட்டுள்ளதாகச் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டது.

Gautham

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நவம்பர் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது

பூமியில் இருந்து விண்வெளிக்கு அரசாங்கங்கள் அல்லது அரசின் உதவி பெறும் அமைப்புகள் மட்டுமே ராக்கெட்கள் & செயற்கைக் கோள்களை ஏவிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விண்வெளித் துறையிலும் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெஃப் பெசாஸின் ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.

இப்போது இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் விண்வெளிக்கு ராக்கெட்கள் ஏவுவதைக் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்த முயற்சித்து வந்தன. அதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் ஓர் இந்திய தனியார் நிறுவனம் தன் முதல் தனியார் ராக்கெட்டை ஏவ உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்கிற இந்திய தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம், விக்ரம் எஸ் என்கிற தனியார் ராக்கெட்டை நவம்பர் 15ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. இந்த தனியார் ராக்கெட்டுக்கு, இந்திய விண்வெளித் துறையின் பிதாமகராகக் கருதப்படும் விக்ரம் சாராபாயின் நினைவாக 'விக்ரம் எஸ்' என பெயரிப்பட்டுள்ளதாகச் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டது.

நிறுவனத்தின் விக்ரம் எஸ் ராக்கெட்டில், 3 பே லோட்கள் விண்ணில் துணை சுற்றுப்பாதையில் (Sub Orbital) விடப்படும். இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்த 2.5 கிலோ எடை கொண்ட ஃபன் சாட் (Fun - Sat) பே லோடும் ஏவப்பட உள்ளது. இதை இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போக மற்றொரு இந்திய பேலோட் & ஒரு வெளிநாட்டு பே லோட் ஏவப்பட உள்ளன. நவம்பர் 15ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விக்ரம் எஸ் ராக்கெட் ஏவப்பட உள்ளது.

ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனரான பவன் குமார் சாந்தனா இந்த விவரங்களை பிரஸ் டிராஸ்ட் ஆஃப் இந்தியா முகமையிடம் கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த 2021 ஜூலையில் சீரிஸ் ஏ ஃபண்டிங்காக 11 மில்லியன் அமெரிக்க டாலர் & கடந்த 2022 செப்டம்பர் மாதம் சீரிஸ் பீ ஃபண்டிங்காக 51 மில்லியன் அமெரிக்க டாலரையும் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் தனியார் நிறுவனமும் இது தான் என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை வலைதளம்.

ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தானே சொந்தமாக ஒரு கிரயோஜனிக் இன்ஜின், ஹைபர்கோலிக் லிக்விட், திட எரிபொருள் அடிப்படையில் இயங்கும் ராக்கெட் இன்ஜின்களை 3டி பிரின்டிங் உட்பட பல புதிய தொழில்நுட்பங்களைப் பயனப்டுத்தி தயாரித்துள்ளது.

விண்வெளிப் பயணத்தை விலைமலிவானதாகவும், நம்பத் தகுந்ததாகவும், தொடர்ந்து விண்வெளிக்கு சென்று வரக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதே ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நோக்கம் என அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இது இந்திய விண்வெளித் துறை & தனியார் ஸ்டார்ட் அப் நிறுவன வட்டாரத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?