Thiomargarita magnifica Twitter
அறிவியல்

உலகின் மிக பெரிய பாக்டீரியா- எங்கு, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

Keerthanaa R

தியோமார்கரிடா மேக்னிஃபிகா (Thiomargarita magnifica) என்கிற இந்த பாக்டீரியா கிட்ட தட்ட 1cm நீளம் உள்ளது. இது மற்ற ராட்சத பாக்டீரியாக்களை விட 50 மடங்கு பெரிதாக உள்ளது. குவாடலூப்பில் உள்ள சதுப்புநிலத்தில் இந்த பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வெள்ளை இதழ்களின் வடிவத்தில் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், இவை வெறும் கண்களாலேயே பார்க்கக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது இவற்றை காண நுண்ணோக்கியின் உதவி நமக்கு தேவையிருக்காது.


இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், இது ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்பு என்று கூறியுள்ளனர். காரணம், செல் மெடபாலிஸத்தின் படி, பாக்டீரியா இவ்வளவு பெரிதாக வளரக்கூடாது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. மேலும், விஞ்ஞானிகள், புதிய இனங்களை விட 100 மடங்கு சிறிய அளவை தான் பரிந்துரைத்திருந்தனர்.

Thiomargarita magnifica

ஆனால், சுமார் 1 செ.மீ நீளத்தில், தியோமார்கரிட்டா மாக்னிஃபிகா என்ற இந்த விசித்திரமான உயிரினம் மற்ற அனைத்து ராட்சத பாக்டீரியாக்களையும் விட தோராயமாக 50 மடங்கு பெரியது.


"ஒரு மனிதன், எவரெஸ்ட் சிகரத்தின் அளவு உள்ள மற்றொரு மனிதனை சந்திப்பது போல் இருக்கும்" என்று கண்டுபிடிக்கபட்ட பாக்டீரியாவின் அளவை குறிப்பிடுகிறார் ஜீன்-மேரி வோல்லண்ட். இவர் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானியாகவும், இந்த ஆய்வின் இணை ஆசிரியராகவும் இருக்கிறார்.

ராட்சத பாக்டீரியா கண்டுபிடிப்பு

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பில் சிம்பயாடிக் பாக்டீரியாக்களைத் தேடும் போது, குவாடெலூப்பில் உள்ள யுனிவர்சிட்டி டெஸ் ஆன்டில்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் பேராசிரியரான ஒலிவியர் க்ரோஸ் என்பவரால் இந்த ராட்சத பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும், இவை ஒற்றை செல்கள் தான் என்று நிரூபிக்க ஆய்வகங்களில் மைக்ராஸ்கோபிக் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆனால், நுண் ஆய்வின் போது பாக்டீரியாக்குள் ஒளிந்திருந்த விசித்திரமான அமைப்பையே வெளிப்படுத்தியது.

பெரும்பாலான டி.என்.ஏ பாக்டீரியாக்களின் செல்லுக்குள் சுதந்திரமாக மிதக்கும். ஆனால் தியோமார்கரிட்டா மாக்னிஃபிகா அதன் DNAடி.என்.ஏவை அதீத பாதுகாப்புடன் வைத்திருக்கிறது.

Thiomargarita magnifica

இந்த பாக்டீரியம் பெரும்பாலான பாக்டீரியாக்களை விட மூன்று மடங்கு மரபணுக்களைக் கொண்டிருப்பதாகவும், நூறாயிரக்கணக்கான மரபணு பிரதிகள் ஒவ்வொரு செல்லிலும் பரவி, வழக்கத்திற்கு மாறாக சிக்கலானதாகவும் இருந்தது.

பாக்டீரியாவின் இந்த பரிணாம வளர்ச்சிக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், ஒரு வேளை தன் பிரிடேட்டரிடமிருந்து (predator) தப்பித்துக்கொள்வதற்கான ஒரு மரபணு மாற்றமாக இது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு.


இந்த மாற்றத்தினால் பாக்டீரியாவின் பாரம்பரிய நன்மைகளில் சிலவற்றை இழக்கக்கூடும். "நுண்ணிய உலகை விட்டு வெளியேறுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றியுள்ளன" என்று வோல்லண்ட் கூறினார்.

Thiomargarita magnifica

இந்த கண் இமை நீள பாக்டீரியாக்கள் இன்னும் மற்ற இடங்களில் கண்டறியப்படவில்லை. மேலும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் திரும்பியபோதும் அந்த கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அவை இருக்கவில்லை. ஒருவேளை இந்த பாக்டீரியா பருவகால உயிரினங்கள் என்பதால் காணாமல் போயிருக்கலாம். ஆனால் சயின்ஸ் இதழின் ஆய்வறிக்கையில், இந்த ராட்சத பாக்டீரியாக்கள் நம் கண்களுக்கு தென்படும் இடங்களில் மறைந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?