"நீரின்றி அமையாது உலகு" என்பது பழைய மொழி, "இணையமின்றி இயங்காது உலகு" இது புது மொழி. சாதாரணமாக தொலைக்காட்சி சேனல் பார்ப்பது தொடங்கி, நீடாமங்கலத்தில் இருந்து கொண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது வரை என எல்லாவற்றையும் சாத்தியமாக்கியது இணையம் தான்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் கிலோ பைட் கணக்கில் ஃபேஸ்புக் பதிவைப் படிப்பதற்கே சுத்திக் கொண்டு இருந்த இணையம், இப்போது நம் வீடுகளில் மெகா பைட்டில் ஓடிடி பார்க்கும் போது பஃபர் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இதற்கிடையிலேயே பல நிறுவனங்கள் "எங்கள் இணைய சேவையின் வேகம் ஒரு ஜிபி" என விளம்பரம் கொடுக்கிறார்கள். ஒரு சில பணக்காரர்களுக்கு அது சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
உங்கள் இணையத்தின் வேகம் திடீரென 1000 ஜிபி வேகத்தில் செயல்பட்டால் எப்படி இருக்கும்? இன்னும் வேகமாக 1 லட்சம் ஜிபி வேகத்தில் செயல்பட்டால்? ஒட்டுமொத்த நெட்ஃப்ளிக்ஸ் சினிமா, ஆவணப் படங்கள், வெப் சீரிஸ்கள் என எல்லாவற்றையும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்துவிடலாம்.
இன்னும் ஒருபடி மேலே போய் உங்கள் இணைய வேகம் 10 லட்சம் ஜிபி என அதிகரித்தால் எப்படி இருக்கும்? ஒட்டுமொத்த உலக இணையத்தின் வேகமே அவ்வளவு தான் என்கிறது இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்று.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், இணையத்தின் வேகம் 1.84 பெடா பிட்ஸ் (Petabit) வேகத்தில் தரவுகள் பரிமாறப்பட்டுள்ளன. ஒரு பெடா பிட் என்பது ஒரு மில்லியன் (10 லட்சம்) ஜிபி என்று பொருள்.
விஞ்ஞானிகள் தரவுகளை கேபிளில் உள்ள ஒவ்வொரு ஃபைபர் ஆப்டிக் திரெட்டுகும் தொடர்புடைய 37 லைன்களில் பிரித்து, பின்னர், ஒவ்வொரு வரியும் ஆப்டிகல் ஸ்பெக்ட்ரமில் வெவ்வேறு வண்ண அதிர்வெண்களுடன் பொருந்தும் 223 சிறிய ஸ்ட்ரீம்களாக பிரித்தனர். இவ்வாறு 7.9 கி.மீ இடைவெளியில் தரவுகள் பரிமாற்றப்பட்டன.
ஒரு இணைப்பில் இவ்வளவு பெரிய வேகத்தை அளவிடுவதற்கு தற்போதைக்கு வழி எதுவும் இல்லாததால், விஞ்ஞானிகள் ஒவ்வொரு சிறிய ஸ்ட்ரீம் வழியாகவும் போலி தரவுகளை அனுப்பி, அனைத்து ஸ்ட்ரீம்களிலிருந்தும் அலைவரிசையை சேர்த்தனர்.
டென்மார்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சால்மெர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து ஒற்றை ஒளி மூலம் மற்றும் ஒற்றை ஆப்டிகல் சிப்பைப் பயன்படுத்தி இந்த தரவுகளை பரிமாற்றம் செய்தனர்.
இதற்கு முன் கடந்த 2022 மே மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இணைய வேகம் 1.02 பெடா பிட்டைத் தொட்டதே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த புதிய சிப் சோதனை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இது முழுமையாகவும், முறையாகவும் பயன்படுத்தப்பட்டால், இணையத்தின் வேகம் 100 பெடா பிட் வரை தொடலாம் என்றும் இந்த ஆய்வில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கூடிய விரைவில் இந்தியாவில் 5ஜி சேவைகள் பரவ இருக்கின்றன. அது இந்தியா முழுக்க வருவதற்குள் உலக இணைய வேகம் இன்னும் எத்தனை தலைமுறைகளைக் கடக்குமோ தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust