Earth Twitter
அறிவியல்

வரலாற்றிலேயே மிக சிறிய நாள் - வேகமாக சுற்றுகிறதா பூமி?

24 மணிநேரத்தின் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்திருக்கிறதா? உண்மையில் இது துல்லியமான அளவீடு இல்லை தான்.

Antony Ajay R

ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என அனைவரும் அறிவோம். நள்ளிரவு 12 மணியில் தொடங்கி அடுத்த நள்ளிரவு வரை ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் சரியாக பூமி 24 மணி நேரத்தில் தான் சுற்றி வருகிறதா?

இந்த 24 மணிநேரத்தின் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்திருக்கிறதா? உண்மையில் இது துல்லியமான அளவீடு இல்லை தான்.

ஒவ்வொரு நாளும் கடந்து செல்வதற்கு சில மில்லி வினாடிகள் முன்பின் ஆகலாம். ஆனால் உலக வரலாற்றிலேயே அதிக விரைவாக சுற்றியது கடந்த ஜூலை 29ம் தேதி தான் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமி சுற்றும் வேகம் கடந்த 1960 முதல் கணக்கிடப்பட்டு வருகிறது. 29, ஜூலை 2022 வழக்கமான 24 மணி நேரத்துக்கு 1.59 மில்லி வினாடிகள் விரைவாக பூமி சுற்றி முடித்தது.

உலகம் சுற்றும் வேகம் அதிகரித்திருக்கிறதா?

கடந்த 2020ம் ஆண்டு முதல் 28 விரைவான நாட்கள் பதிவாகியிருக்கின்றன. இது ஆய்வாளர்களைப் புவியின் வேகம் குறித்து சந்தேகிக்க வைத்திருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டுமே 2 விரைவான நாட்கள் பதிவாகியிருக்கின்றன. 26 ஜூலை 2022ல் பூமி 1.50 மில்லி வினாடி விரைவாக சுற்றி முடித்தது. அதற்கு முன்னர் 1.47 மில்லி வினாடி விரைவாக சுற்றி முடித்தது ரெக்கார்டாக இருந்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?