லூனார் க்ரூசர்

 

Twitter

அறிவியல்

ஜப்பான் ஏஜென்சியுடன் இணைந்து நிலவில் செல்லும் “லூனார் க்ரூசரை" உருவாக்குகிறது டொயாட்டொ

Antony Ajay R


நிலவிலன் மேற்பரப்பில் செல்லக்கூடிய வாகனத்தை கார் தயாரிப்பு நிறுவனமான டொயாட்டொ மற்றும் ஜப்பானில் உள்ள ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறது. இதற்கு லூனார் க்ரூசர் எனப்பெயரிட்டுள்ளனர்.

சந்திரனின் மேற்பரப்பு இறந்த எரிமலைகள், பள்ளதாக்குகள் மற்றும் எரிமலை ஓட்டைகளால் ஆனது. இதற்கு லூனார் பரப்பு இன்று பெயர் ஈர்ப்பு விசை இல்லாத லூனார் பரப்பில் செல்லும் படி இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் வருங்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் குடியேறும் மக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் மக்கள் உண்பது, வேலை செய்வது, தூங்குவது மற்றும் மற்றவர்களுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்வது போன்றவற்றை இந்த வாகனத்திலிருந்தே செய்ய முடியும்.

நிலவு வாகனம்

லூனார் க்ரூசர்காக விண்ணில் ஆய்வு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்ய ஒரு ரோபோ கையும் உருவாக்க ஜப்பான் நிறுவனம் (Gitai ) டொயாட்டோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Gitai-ன் தலைமை நிர்வாகி ஷோ நகனோஸ் கூறுகையில், “விண்வெளியில் வாகனம் வெடிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பெரும் சவாலாக எதிர்கொள்ளப்பட்டது, ஆனால் விண்வெளியில் பணிபுரிவதற்கு விண்வெளி வீரர்களை பயன்படுத்துவது பெரிய செலவுகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும். அங்கு ரோபோக்கள் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

1930-ம் ஆண்டு டொயாட்டொ நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது தான் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாகக் கொஞ்சம் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதனால் கார் தயாரிப்போடு, வீடுகள், படகுகள், ஜெட் விமானங்கள் மற்றும் ரோபோக்கள் உருவாக்கத்திலும் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் வாகனம் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?