செயற்கை நுண்ணறிவு

 

Twitter

அறிவியல்

2022-ல் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி எப்படி இருக்கும்?

Govind

1) இயற்கை மொழிச் செயலாக்கத் துறையின் வளர்ச்சி

மனிதக்குலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு மொழி. மற்ற பண்புகளை விட, இது நமது இனத்தின் அறிவுத்திறனை வரையறுக்கும் அடையாளமாகும்.

இயற்கையாகவே, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மொழி அத்தியாவசியமாக இருக்கிறது. மொழியைத் துல்லியமாக தானியங்குபடுத்தும் திறன் மதிப்பு உருவாக்கத்திற்கான வரம்பற்ற வாய்ப்புகளைத் திறக்கிறது.

AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு-இன் வேறு எந்த வகையையும் விட இயற்கை மொழிச் செயலாக்கத் துறை natural language processing (NLP) முதன்மையான ஒன்று. இதில் அதிக புதிய நிறுவனங்கள் தோன்றி வளரும். இவற்றுக்கு நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நிதியளிப்பதால், மற்ற துறைகளை விட மொழி தொடர்பான AI நிறுவனங்கள் முன்னணி நிலைக்கு வரும்.

பொழுது போக்குத் துறை முதல் பொருளாதாரம் – ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை வரை மொழிகளின் சங்கமமும் இணைப்பும் அவசியம். அதை இத்துறை செயற்கை நுண்ணறிவு சாத்தியப்படுத்தும். இனி ரசிப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும், பரிவர்த்தனைகளுக்கும் மொழி ஒரு தடை இல்லை.

செயற்கை நுண்ணறிவு

2) டேட்டாபிரிக்ஸ், டேட்டா ரோபோட் மற்றும் ஸ்கேல் AI மூன்று நிறுவனங்களும் பொது மக்களிடத்தில் பங்கு திரட்டும்.

நவீன AI பொருளாதாரத்தில் பெரிய வெற்றியாளர்களின் முதல் அலைகளில் இந்த மூன்று நிறுவனங்களும் அடங்கும். அவை ஒவ்வொன்றும் மற்ற நிறுவனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவை உருவாக்க உதவும் கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குகின்றன.

மூன்று நிறுவனங்களும் வியக்கத்தக்க வகையில் அதிக வருவாய் வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. இவை மூன்றும் 2021 ஆம் ஆண்டில் "ப்ரீ-ஐபிஓ" முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து பெரிய முதலீடுகளைப் பெற்றுள்ளன. பொது மக்களிடமிருந்து பங்கு மூலம் தொகை திரட்டுவதற்கு முன்பு இத்தகைய ப்ரீ-ஐபிஓ நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும். இவர்கள் அப்படி முதலீடு செய்து விட்டாலே அந்த நிறுவனங்கள் பெரும் அப்பாடக்கர்களாக வருவார்கள் என்பது நிச்சயம்.

காலநிலை

3) காலநிலை குறித்த AI நிறுவனங்கள் வளரும்.

பருவநிலை தொழில்நுட்பமானது, ஸ்டார்ட்அப்களின் உலகின் கிராக்கி உள்ள தொழில் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது, இந்த ஆண்டு இந்தத் துறையில் மூலதனம் சாதனையளவு குவிந்துள்ளது.

பல காலநிலை AI ஸ்டார்ட்அப்கள் சமீபத்தில் பெரிய நிதியுதவியுடன் காட்சிக்கு வந்துள்ளன. அடுத்த ஆண்டு, இந்த நிறுவனங்களில் சிலர் தீவிரமடைந்து வரும் காலநிலை தொழில்நுட்ப ஆர்வத்தை பில்லியன் டாலர்-பிளஸ் மதிப்பீடுகளுக்கு உயர்த்துவார்கள். உள்ளூர் முதல் உலகம் வரை அணு அணுவாகக் காலநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களும், அதன் வர்த்தகப் பயன்பாடுகளும் இந்த ஆண்டு அதிகரிக்கும்.

செயற்கை நுண்ணறிவு

4) சக்திவாய்ந்த புதிய AI கருவிகள் வீடியோவுக்காக உருவாக்கப்படும்.

நமது டிஜிட்டல் வாழ்க்கையின் ஆதிக்க ஊடகமாக வீடியோ மாறிவிட்டது. சிஸ்கோவின் கூற்றுப்படி, 2022 இல் அனைத்து இணையத் தரவுகளிலும் 80% வீடியோவாக இருக்கும். ஒவ்வொரு நாளும், 7 பில்லியன் வீடியோக்கள் யூடியூப் - இல் பார்க்கப்படுகின்றன. மற்றும் 100 மில்லியன் வீடியோக்கள் அதாவது பத்து கோடி வீடியோக்கள் TikTok - டிக்டாக்கில் பதிவேற்றப்படுகின்றன. நெட்ஃபிலிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+, ஹுலு முதல் எச்பிஓ மேக்ஸ் மற்றும் அதற்கு அப்பால், இணைய ஸ்ட்ரீமிங் சேவைகளின் பயனர் தளங்கள் மற்றும் உள்ளடக்க நூலகங்கள் தொடர்ந்து பெருத்துக் கொண்டே வருகின்றன.

இன்னும், படம் மற்றும் உரை போன்ற பிற தரவு முறைகளுடன் ஒப்பிடுகையில், ஆழமான கற்றல் அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் வீடியோவிற்கான திறன்களை உருவாக்குவதில் இன்றுவரை குறைந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தை வாய்ப்பை பிரதிபலிக்கிறது.

வீடியோ தேடலிலிருந்து வீடியோ எடிட்டிங் - வீடியோ உருவாக்கம் வரை 2022 ஆம் ஆண்டில் வீடியோவிற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள் மலருவதைக் காண எதிர்பார்க்கலாம். இனி வீடியாவிற்காக நாம் மனிதர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

செயற்கை நுண்ணறிவு

5) AI துறையில் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் முதலீடு அனைத்தும் நிறுத்தப்படும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் மோதலில் இருநாடுகளும் இருப்பது இரகசியமல்ல. இது 2022ல் மிகவும் மோசமாகும்.

கடந்த சில வாரங்களில், அமெரிக்க அரசாங்கம் AI ஸ்டார்ட்அப் சென்ஸ்டைம், ட்ரோன் நிறுவனம் DJI மற்றும் பல முன்னணி சீன AI அமைப்புகளை முதலீட்டுத் தடுப்புப் பட்டியலில் சேர்த்தது. இவை சீனாவின் மிக முக்கியமான AI நிறுவனங்களில் ஒன்றாகும்.

தொழில்நுட்பம்

அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழு (CFIUS) சீன நிறுவனங்கள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதிலிருந்து தடுப்பதற்காக அதிக அளவில் தீவிரமாகச் செயல்படுகிறது. எரிக் ஷ்மிட் தலைமையிலான செல்வாக்குமிக்க செயற்கை நுண்ணறிவுக்கான தேசியப் பாதுகாப்பு ஆணையம் (NSCAI), சீனாவுடனான AI ஆயுதப் போட்டியினை மேலும் தூண்டியுள்ளது.

இவற்றின் விளைவு சீன அமெரிக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இணைந்து பணியாற்றுவது சாத்தியமற்றதாக்கி விடும்.

தொழில்நுட்பம்

6) பல பெரிய கிளவுட்/டேட்டா இயங்குதளங்கள் புதிய செயற்கை தரவு முயற்சிகளை அறிவிக்கும்.

சரியான தரவைப் பெறுவது இன்று AI தயாரிப்புகளை உருவாக்குவதில் மிக முக்கியமான சவாலான பகுதியாகும். நிஜ-உலக தரவுத்தொகுப்புகளைச் சேகரித்து வகை பிரித்து பெயரிடுவதற்கான நிலையின் தேவை அதிகரித்திருக்கிறது.

கார்ட்னர் எனும் வல்லுநர் 2024 ஆம் ஆண்டுக்குள் செயற்கைத் தரவு 60% செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் என்று கணித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு செயற்கை தரவு தொடக்க நிறுவனமான AI.Reverie ஐ ஃபேஸ்புக் கையகப்படுத்தியது.

அடுத்த ஆண்டு, பல முக்கிய கம்ப்யூட்டிங் தளங்கள் புதிய செயற்கை தரவு முயற்சிகளைத் தொடங்கும். இதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்: Amazon Web Services, Microsoft Azure, Google Cloud Platform, Unity Technologies, Scale AI. இந்த செயற்கை தரவு நிறுவனங்கள் தரவுகளை வைத்து உருவாக்கும் வணிக, கண்காணிப்பு இதர துறைகளில் மாபெரும் பாய்ச்சல் நடக்கும்

7) சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் சீனாவிற்கு வெளியே உலகின் மிக முக்கியமான செயற்கை நுண்ணறிவு மையமாக கனடாவின் டொராண்டோ தன்னை நிலைநிறுத்தும்.

ஜெஃப் ஹிண்டன் போன்ற ஆழமான கற்றல் முன்னோடிகளின் உழைப்பால் நவீன செயற்கை நுண்ணறிவு டொராண்டோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. டொராண்டோ உலகின் மிக முக்கியமான செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக உள்ளது.

சமீபத்திய ஒரு அறிக்கையின்படி, டொராண்டோ-வாட்டர்லூ பெருநகரப் பகுதியானது வட அமெரிக்கா முழுவதிலும் (பே ஏரியாவிற்குப் பின்னால்) தொழில்நுட்பத் திறமைக்கான #2 வது பெரிய சந்தையாகும் - மேலும் #1வது சந்தையாகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. டொராண்டோவில் ஹிண்டனால் இணைந்து நிறுவப்பட்ட வெக்டர் நிறுவனம், உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள், மைக்ரோசாப்ட் முதல் ஐபிஎம் வரை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இந்நகரத்தில் தங்களை நிறுவிக் கொண்டுள்ளன.

தொழில்நுட்பம்

8) "பொறுப்பான செயற்கை நுண்ணறிவு" என்பது நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகள் நடக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பொறுப்புடன், நெறிமுறையுடன் மற்றும் சமமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சி வேகமாக முன்னேறி வருகிறது.

Timnit Gebru, Joy Buolamwini மற்றும் Cathy O'Neill போன்ற ஆராய்ச்சியாளர்களின் தலைமையில் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாட்டு குறித்து வளர்ந்து வரும் இயக்கம் உருவாகியுள்ளது.

பொறுப்பான செயற்கை நுண்ணறிவு நடைமுறைகள் மற்றும் கருவித்தொகுப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வருவதால், இது மாறத் தொடங்கும். இந்தத் தயாரிப்புகள் தொழில்நுட்ப ஜாம்பவான்களிடமிருந்தும் (எ.கா., மைக்ரோசாப்ட், ஐபிஎம்) புதிய தொடக்க நிறுவனங்களிலிருந்தும் (எ.கா., பாரிட்டி, ஃபிட்லர் லேப்ஸ்) வரும்.

இந்த மாதத்தில்தான், வால்மார்ட், நைக், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் சிவிஎஸ் உள்ளிட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களின் குழு, டேட்டா & டிரஸ்ட் அலையன்ஸை அறிவித்தது. அதன் குறிக்கோளானது "அல்காரிதம் சார்புகளைக் கண்டறிந்து எதிர்த்துப் போராடுவது" ஆகும்.

எப்படியோ 2022-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் பாய்ச்சலையும் நாம் எதிர்பார்த்திராத மாற்றங்களையும் கொண்டு வரும். அது வீடியோ எடிட்டிங்காக இருக்கலாம், மொழி பெயர்ப்பாக இருக்கலாம் அல்லது துல்லியமாகக் காலநிலை மாற்றங்களைக் கணிப்பதாக இருக்கலாம். இவற்றுடன் 5ஜி தொழில் நுட்பமும் சேரும் போது நாம் இதுவரை கனவு கண்டிராத உலகம் தொழில் நுட்ப உதவியுடன் நம்மை வந்தடையும். அதற்கு இப்போதே தயாராகுங்கள்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?