நல்ல நிம்மதியான உறக்கம் நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான உடல் செயல்பாடாகும். காலையிலிருந்து ஓடிக்கொண்டிருப்பது நாம் மட்டுமல்ல, நம் உடலில் உள்ள உறுப்புகளும் தான்.
இதனால் இவை சீராக செயல்பட இரவில் உறங்குவது அவசியமாகிறது.
ஒரு ஒருவருக்கும், ஒரு விதமான பொசிஷனில் படுத்தால் தான் உறக்கம் வரும். அப்படி வித விதமான ஸ்லீப்பிங் பொசிஷன்களுக்கு பின்னால் சில காரணங்களும் உள்ளன. அது நம் பர்சனாலிட்டியை பற்றியும் சொல்கிறது. அவை என்னென்ன? இந்த பதிவில்...
இந்த நிலையில் படுத்து உறங்கினால், தூங்கி எழும்போது நாம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மேலும், உங்கள் மீதும், மற்றவர்கள் மீதும் உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்குமாம்.
அதிக எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியலாம்!
சிலர் ஒரு பக்கமாகவே படுத்து உறங்குவதை நாம் கவனித்திருப்போம். இது வலம் இடம் என எந்த பக்கமாகவும் இருக்கலாம்.
அப்படி ஒரு பக்கமாக உறங்குபவராக இருந்தால், நீங்கள் திறந்த மனப்பான்மை கொண்டவராம். யாரையும் எளிதில் ஏற்றுக்கொண்டு அரவணைப்பவராக நீங்கள் இருப்பீர்களாம்
மேலும், சேலி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இடப்பக்கம் உறங்குபவராக இருந்தால் நீங்கள் அதிக கிரியேட்டிவ் ஆக இருப்பீர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது
உறங்கும்போது உங்கள் உடலின் நிலை ஒரு கையை நீட்டியவாக்கில் இருந்தால், அதாவது உதவிக்காக கை நீட்டுவது போல இருந்தால் நீங்கள் எதையாவது தேடுகிறார்கள் என்று பொருளாம்.
மேலும் ஒருவரை நம்ப நீங்கள் நீண்ட காலம் எடுத்துகொள்ளலாம். எப்போதும் யாரையும் ஒரு சந்தேகக் கண்ணுடன் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்
தலையணையை கட்டியணைத்து நீங்கள் உறங்கினால், சந்தோஷமான, உற்சாகத்தின் மறு உருவமாக இருப்பவர்கள். உங்கள் வாழ்வின் உங்களின் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராகவும், அவர்களுக்காக ஒரு படி மேலெ சென்று கூட உதவுபவராகவும் நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள்
சிலர் ஸ்டிரிக்ட்டாக ஒரே நிலையில், அதுவும் இருக்கமாக நேராக மல்லாந்து படுத்திருப்பதை கவனித்திருக்கலாம். ஒரு காவலாளி விறைப்பாக நிற்பது போல.
அவர்கள் மிகவும் கடினமான மனிதராகவும், செய்யும் அனைத்து வேலைகளிலும் அதீத கவனத்துடன், முறையாக டைம் டேபிள் போட்டு நடப்பவர்களாம். வாழ்க்கையை மிகவும் சீரியஸான விஷயமாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று பொருள்
இப்படி படுத்து உறங்குபவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறீர்கள். மேலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் மிகவும் பாப்புலரான ஆளாகவும் இருப்பீீர்கள்
தலையை குப்புற வைத்து படுத்து உறங்குவது எனலாம். நீங்கள் அனைவருடன் ஃபிரெண்ட்லி ஆக பழகினாலும், அடுத்தவரின் விமர்சனத்தை உங்களால் எளிதில் ஏற்க இயலாது. இந்த பொசிஷனில் தொடர்ந்து உறங்கினால், உங்களுக்கு கழுத்து வலியும் வரக்கூடும்.
பெயருக்கு ஏற்றார் போல, ஒரு குழந்தை கருவில் இருப்பதுபோல இருக்கும் இந்த உறக்க உடல்நிலை. உங்களையும் ஒரு குழந்தையை போல இந்த உலகத்திடம் இருந்து காக்கவேண்டும் என்கிற மனப்பான்மை உங்களுக்கு இருக்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust