மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்? Twitter
அறிவியல்

Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

Govind

குழந்தையாக பிறந்தது முதல் பல தருணங்களில் பல மனிதர்களிடம் இருந்து முத்தை பெறுகிறோம். ஒரு வகையில் முத்தத்துக்கு மனித இனம் பழகிவிட்டிருக்கிறது. அன்பு, பாசம், காதல், காமம் என பல உணர்வுகளை கடத்த நாம் முத்தத்தையே கருவியாக தேர்ந்தெடுக்கிறோம். உலகம் முழுவதும் மக்கள் பல வகைகளில் முத்தம் கொடுக்கிறார்கள். இந்த நெருக்கமான உடல் செயல்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

"ஆனால், முத்தமிடுதல் அல்லது முத்தமிடாததைத் தாண்டி மனிதனின் உலகளாவிய முக்கிய அம்சமாக நான் நினைப்பது வேறு. மனிதர்களின் உணர்ச்சியை முத்தமிடுவதைத் தாண்டி பல வழிகளில் உணர முடியும்" என்று ஜான்கோவியாக் கூறுகிறார்.

உதட்டோடு உதடு முத்தமிடாத கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் மக்கள் நெருக்கமாக இருக்க வேறு வழிகளை வைத்திருக்கிறார்கள் என்கிறார் எழுத்தாளர் ஷெரில் கிர்ஷன்பாம். "டார்வின் விவரித்த மலாய் முத்தம் (மூக்கோடு முக்கு உரசுவது) உள்ளது, அங்குப் பெண்கள் தரையில் அமர்ந்திருப்பார்கள், ஆண்கள் அவர்கள் மீது தொங்கியவாறு ஒருவரையொருவர் விரைவாக முகர்ந்து பார்ப்பார்கள். அவர்களது துணையின் வாசனையின் மாதிரியை முகர்ந்து கொள்வார்கள்."

Love

பப்புவா நியூ கினியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ட்ரோப்ரியான்ட் தீவுகளில், காதலர்கள் நேருக்கு நேர் உட்கார்ந்து ஒருவரையொருவர் கண் இமைகளைக் கவ்வி முத்தமிடுகிறார்கள். "இன்று நம்மில் பலருக்கு இது காதலின் உச்சமாகத் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு அதுதான் காதலின் மாஜிக் இன்பம்", என்கிறார் கிர்ஷன்பாம். உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது மற்றும் பிற வகையான முத்தங்களில் முக்கியமானது என்னவென்றால், ஒருவரையொருவர் பற்றிய நெருக்கமான, அந்தரங்கமான உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதாகும்.

நம் உதடுகளை ஒன்றாக அழுத்தி முத்தமிடுவது கிட்டத்தட்ட ஒரு தனித்துவமான மனித நடத்தை. முத்தம் ஒரு பரிணாம நோக்கம் கொண்டதாக இருந்தால், ஏன் விலங்குகள் முத்தமிடுவதைச் செய்யவில்லை?

மெலிசா ஹோகென்பூம் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். ஒரு கூட்டாளியின் முகத்தை நெருங்கி வருவதற்கு நாம் கொண்டிருக்கக் கூடிய காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு நன்றாக முகர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான். வாசனை அனைத்து வகையான பயனுள்ள தகவல்களையும் வெளிப்படுத்த முடியும். வாசனை என்பது உணவு, நோய் இருப்பு, மனநிலையோடு தொடர்புடையதென்று சொல்லலாம். பல விலங்குகள் நம்மை விட அதீத வாசனை உணர்வுகளைக் கொண்டுள்ளன. எனவே அவை கிட்டத்தட்ட நம்மைப் போல நெருக்கமாக இருக்க வேண்டியதில்லை.

ஆகவே உதட்டோடு உதடு, மூக்கோடு மூக்கு, கண்ணோடு கண் என முத்தம் எதுவானாலும் அதன் நோக்கம் இணையின் வாசனையை உணர்ந்து கொள்வதே. அதுதான் அதன் உயிரியில் பண்பு. இந்த வாசனை என்னவிதமான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளது என்பதை அறியவும் மனிதர்கள் இப்படி நெருக்கமாக முத்தமிடுகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?