Blue Rays from Smartphone Canva
அறிவியல்

Smart phone, laptop பயன்படுத்தினால் சீக்கிரம் வயதாகிவிடுமா? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

இந்த ஆய்வில் பழ ஈக்களை உட்படுத்தி, நீல ஒளியினால் அவற்றின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை முதலில் பதிவு செய்திருக்கிறார் கிபுல்டோவிச்.

NewsSense Editorial Team

ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்தினால் விரைவில் வயதாகலாம் என ஆரைச்சிகள் தெரிவித்துள்ளன. அவை வெளியிடும் அதிகப்படியான நீல ஒளி நம்மை சீக்கிரமே வயதானவர்கள் ஆக்கிவிடுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

மூத்த எழுத்தாளரும், ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாட்விகா கிபுல்டோவிச் என்பவர், "டிவி, மடிக்கணினிகள் மற்றும் தொலைப்பேசிகள் போன்ற அன்றாட சாதனங்கள் நீல ஒளியை அதிகமாக வெளிப்படுத்தும் காரணத்தால், பரவலான செல்களில் தீங்கு ஏற்படுகிறது. நம் உடலில், தோல் மற்றும் கொழுப்பு செல்கள், உணர்ச்சி நியூரான்கள் வரை இதனால் பாதிக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.

ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவில், அதிகப்படியான நீல ஒளி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக சீக்கிரம் முதுமையடையும் பாதிப்பிலிருந்து மீளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பழ ஈக்களை உட்படுத்தி, நீல ஒளியினால் அவற்றின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை முதலில் பதிவு செய்திருக்கிறார் கிபுல்டோவிச்.

பழ ஈக்களை இரண்டு வாரங்களுக்கு நீல ஒளியில் வைத்து, அப்போது ஈக்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களின் அளவையும், அதே போன்ற ஈக்களை முழு இருளில் வைத்திருந்த போது ஏற்பட்ட வளர்சிதை மாற்றங்களின் அளவையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.

பழ ஈக்களின் உயிரணுக்களில் வளர்சிதை மாற்றங்களின் அளவு நீல ஒளியின் வெளிப்பாட்டிற்குப் பிறகு கணிசமாக வேறுபடுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆராய்ச்சியாளர்களின் அவதானிப்புகள் அவர்களின் முந்தைய முடிவுகளை ஒத்துப்போவதாக இருந்தன. முடிவில் நீல ஒளி முதுமையை விரைவுபடுத்துகிறது என்றும், செல்கள் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றும், இது முன்கூட்டிய உயிரணு இறப்புக்கு வழிவகுக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டது.

கிபுல்டோவிச் கூற்றுப்படி, நீல ஒளி மனிதர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் ஈக்கள் மற்றும் மனிதர்களின் உயிரணுக்களில் உள்ள சமிக்ஞை இரசாயனங்கள் ஒரே மாதிரியானவையாகும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உடல் பருமன் மற்றும் மனநல பிரச்னைகள் போன்ற நோய்களுடன் அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தை காரணமாகக் காட்டி முடிவுகள் கிடைத்திருக்கின்றன.. மனித உயிரணுக்களில் நீல ஒளியின் நேரடி தாக்கத்தை ஆராய, வருங்காலங்களில் விஞ்ஞானிகள் கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?