அவை ஆண்டு முழுவதும் உணவின் முக்கிய பகுதியாக இருந்தாலும், ரமலான் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பேரிச்சம்பழங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
சத்தான பழங்கள் பெரும்பாலான வழிபாட்டாளர்களின் இஃப்தார் உணவுகளின் துவக்கமாக உள்ளது. மட்டுமல்ல, புனித மாதத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பல இனிப்புகளின் ஒரு பகுதியாகவும் அவை இருக்கின்றன.
ஆனால் அவை ஏன் ரமலான் உணவின் தவிர்க்க முடியாத பகுதியாக இருக்கிறது?
பேரீச்சம் பழம் இப்பகுதியில் பரவலாக வளர்வது மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் 160 வகையான பழங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதன் நுகர்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பின்பற்றுகிறது.
“முகம்மது நபியின் மிகவும் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் பேரீச்சம்பழம் ஒன்றாகும். இது முகம்மது நபியின் [உதாரணமாக] ஆசீர்வதிக்கப்பட்ட நடைமுறையாக கருதப்படுவதால், முஸ்லிம்கள் இஃப்தார் நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டு நோன்பு திறப்பது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது,” என்று டாக்டர் நிசார் அகமது பத்தூலுன்னிசா கூறினார்.
எனவே இஃப்தார் நோன்பை பேரீச்சம் பழங்களுடன் தொடங்குவது கட்டாயமில்லை என்றாலும், அது விரும்பத்தக்க நடைமுறையாகும். முகம்மது நபி தனது இப்தாரை மூன்று பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீருடன் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
பேரீச்சம்பழம் உட்கொள்வதால் கூடுதல் சத்தான நன்மைகளும் உள்ளன.
"அவற்றின் சிறந்த சுவைக்குக் கூடுதலாக, பேரீச்சம்பழத்தில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உள்ளன. அளவாக உட்கொள்ளும் போது, பேரீச்சம்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பங்களிக்கும். அவை பாலிஃபீனால்களிலும் அதிகமாக உள்ளன. இது ஆன்டிஆக்சிடண்ட் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் ஆகும். இந்த ஆக்ஸிஜனேற்றம் உடலை அழற்சியிலிருந்து பாதுகாக்கின்றன. மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட பேரீச்சம்பழத்தில் அதிக பாலிபினால்கள் உள்ளன," என்று டாக்டர் பத்தூலுன்னிசா விளக்கினார்.
கூடுதலாக, பேரீச்சம் பழங்கள் வெற்று கலோரி இனிப்புகளுக்கு மாற்றாகச் செயல்பட முடியும். எனவே இனிப்புகளில் சர்க்கரைக்கு மாற்றாக இயற்கையான பேரிச்சம் பழங்கள் இருக்கும்.
வைட்டமின் பி-6 மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதே வேளையில் பேரீச்சம்பழம் ஒரு நபரின் இனிப்பு உணர்ச்சியை திருப்திப்படுத்துகிறது. அவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மக்கள் நீண்ட நேரம் வயிறார இருப்பதாக உணர உதவுகிறது, ”என்று டாக்டர் பத்தூலுன்னிசா கூறினார்.
மத்திய கிழக்கு உணவில் அவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள் கிடைக்கின்றன. முதன்மையான பேரீச்சம்பழத்தின் பல்வேறு வடிவங்களும் உள்ளன. இருப்பினும், சர்க்கரை அதிகமுள்ள பேரீச்சம்பழங்கள், நட்ஸ் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய பேரீச்சம்பழங்கள், சாக்லேட் பூசப்பட்ட பேரீச்சம்பழங்கள் போன்றவை இருக்கின்றன. இருப்பினும் மற்ற இனிப்பு வகை பேரீச்சம்பழங்களை விடப் பச்சை மற்றும் உலர்ந்த வடிவ பழங்கள் ஆரோக்கியமானவை.
ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை உள்ள குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் இப்பழத்தை உண்ணலாம்.
கூடுதலாக, இதை அளவோடு சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதுகாப்பானது.
“நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழத்தை உட்கொள்ளும்போது அவர்களின் மொத்த சர்க்கரை அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பேரீச்சம்பழத்தை அளவோடு சாப்பிடுவது ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 2011 இல் நியூட்ரிஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பேரீச்சம் பழங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது அவை நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு இல்லாதவர்களுக்கு இரத்த சர்க்கரையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தாது, ”பத்தூலுன்னிசா மேலும் கூறினார்.
"நீரிழிவு உள்ளவர்கள் ஒரு நேரத்தில் இரண்டு முதல் மூன்று இயற்கை பேரீச்சம்பழங்களைச் சாப்பிடலாம், ஆனால் ஒரு உணவு நிபுணரின் ஆலோசனையைப் பெறவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறுபுறம், நீரிழிவு இல்லாதவர்களுக்கு 100 கிராம் அல்லது ஒரு நாளைக்கு ஒரு சில பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவது பொருத்தமானது, ”என்று அவர் அறிவுறுத்தினார்.
குறிப்புக்கு, மூன்று இனிக்காத பேரீச்சம்பழங்கள் இனிக்கின்ற ஒரு பழத்திற்குச் சமம். மேலும் அவை 70 கலோரிகளைக் கொண்டிருக்கின்றன.
அதன் எண்ணற்ற நன்மைகள் காரணமாக, இப்பழம் நோன்பிருக்கும் முஸ்லீம்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
"முஸ்லிம்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உதடுகளில் மென்மையாக்கப்பட்ட பேரீச்சம்பழங்களைத் தேய்ப்பார்கள், இது நபிகள் நாயகத்தால் நடத்தப்பட்ட ஒன்று. மேலும் இது இரத்தச் சர்க்கரைக் குறைவு மற்றும் வலியைத் தடுக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் அவை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும் வயதானவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை மலச்சிக்கல், இரத்த சோகை மற்றும் பிற நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்கின்றன, ”என்று டாக்டர் பத்தூலுன்னிசா கூறினார்.
புனித மாதத்தில் இனிப்பு உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
"ரமலானில், மக்கள் இனிப்பு உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கிறார்கள், இது அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்ததல்ல. உண்ணும் நேரங்களைத் தவிர, மற்ற நாட்களைப் போலவே உணவு முறையும் இருக்க வேண்டும். மக்கள் பொதுவாக அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் இனிப்புகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்,” என்று டாக்டர் பத்தூலுன்னிசா கூறினார்.
ஆக, ரமலான் நோன்பின் போது இனிப்பு குறைவான பேரிச்சழம் வகைகளை அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்புகளைக் குறையுங்கள். மற்ற நாட்களில் சாப்பிடுவது போல அளவாகச் சாப்பிடுங்கள். இந்த வழிகாட்டுதல்கள் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல எதோ ஒரு வகையில் நோன்பிருக்கும் மற்ற மக்களுக்கும் பொருந்தும்.