முருகன் Twitter
ஆன்மிகம்

சேலம் : உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு குடமுழுக்கு!

Antony Ajay R

உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலை இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது. இதுவரை உலகின் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்பட்ட மலேசியா முருகன் சிலையை விட இது, 6 அடி உயர்ந்திருக்கும் சிலை.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர், 2015ல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, 60 ஏக்கர் நிலம் வாங்கி, 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்தார். அதே இடத்தில், 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையைப் போன்று வடிவமைக்க முடிவு செய்தார்.

அதற்காக, மலேசியாவில் முருகன் சிலை வடிவமைத்த, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் என்பவரை அழைத்து வந்து, உலகில் உயரமான முருகன் சிலையை, 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்து, 2016 செப். 6ல் பூமி பூஜை போட்டு பணியைத் தொடங்கினார். 2018ல், முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர் (50) , வசந்தராஜன் (55) , ஞானவேல் (52) , மகள் பத்மாவதி (50) உள்ளிட்ட குடும்பத்தினர், முருகன் சிலை அமைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.

முத்துமலை முருகன் சிலை

கடந்த ஆறு ஆண்டுகளாகக் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாரியாரைக் கொண்டு வேதங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான, இன்று கும்பாபிஷேக தினத்தில் பல்வேறு விதமான சிறப்பு யாகங்கள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முருகனைச் சிறப்பித்தனர். முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்த்தூவப்பட்டது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?