ஜெர்மன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மூசா ஆஸ்கன் யமக் மாரடைப்பால் பலியாகியுள்ளார். சனிக்கிழமையன்று முனிச்சில் நடைபெற்ற போட்டியில் யுகாண்டா நாட்டு வீரர் ஹம்ஸா வன்டேராவை எதிர்கொண்டார் மூசா. இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாவது சுற்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கிய மூசா பின் எழவில்லை.
இரண்டாவது சுற்றில் வன்டேரா அடித்ததில் கதி கலங்கிய மூசா ரிங்கிலேயே மயக்கமடைந்தார். ஸ்டேடியத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் மூசாவை எழுப்ப முயற்சித்து அவர் எழாததால், அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இவரது உயிர் பிரிந்துவிட்டது.
இந்த போட்டி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் ரசிகர்கள் மனதை இச்சம்பவம் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
38 வயதான மூசா இதுவரை பங்கேற்ற போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே குவித்துள்ளார். ஐரோப்பிய, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை இளம் வயதிலேயே வென்ற மூசா ஒரு அன்டிஃபீடட் பாக்ஸராக திகழ்ந்தார்.
தன் அடுத்தப்போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இறந்ததால், இவரது சாதனை முறியடிக்கப்படாத ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust