Babar Azam - Rashid Khan Twitter
ஸ்போர்ட்ஸ்

Asia Cup 2022: ஆஃப்கான் - பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்: என்ன நடந்தது?

Keerthanaa R

நேற்று நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி வென்றதால், ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் கோபத்தில் பாகிஸ்தான் ரசிகர்களைத் தாக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 26 அன்று துவங்கியது. லீக் போட்டிகள் முடிந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன.

நேற்று பாகிஸ்தான் அணி ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.

130 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 16 ஓவர்கள் முடிவில் 87க்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. அடுத்த மூன்று ஓவர்களில் 118 ரன்களை எட்டியிருந்த அணி, 9 விக்கெட்களை இழந்திருந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க, போட்டியில், சுவாரஸ்யம் கூடியது. சிறப்பாக ஆடிய நசீம் ஷா, 20வது ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்ஸர், தொடர்ந்து இரண்டாவது பந்திலும் ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். மைதானத்திலிருந்த இருக்கைகளை வீசி எறிந்து தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். மேலும் போட்டியை காண வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மைதானத்தினின்று வெளியில் வந்த பிறகும் இரு நாட்டு ரசிகர்களுக்குள்ளும் மோதல்கள் தொடர்ந்தது. பின்னர் மைதானத்தில் அருகிலிருந்த காவலர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

நேற்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, ஆஃப்கான் வீரர் ப்ரீத் அகமத்தை பேட்டால் அடிக்க சென்றார்.

ஆஃப்கானிஸ்தான் அணி நேற்று தோற்றதால், இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைய இருந்த வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?