SRH vs MI: முதல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் - சச்சின், ரோஹித் பேசியது என்ன? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

SRH vs MI: முதல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் - சச்சின், ரோஹித் பேசியது என்ன?

அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்த முதல் ஐபிஎல் விக்கெட் புவனேஷ்வர் குமாரின் விக்கெட். புவனேஷ்வர் குமார் உத்திர பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியபோது, அவர் தன் கரியரில் எடுத்த முதல் விக்கெட் அர்ஜுனின் தந்தை சச்சின் டெண்டுல்கருடையது. சச்சின் அந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார்

Keerthanaa R

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி பெற்று, ஐபிஎல்லில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 6 புள்ளிகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை.

நேற்றைய போட்டியில், கடைசி ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், வெறும் 6 ரன்கள் வழங்கி, ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய மும்பை அணி பேட்டர்கள் சிறப்பாக விளையாடி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 64 ரன் எடுத்தார். ஹைதராபாத் சார்பில் மார்கோ யான்சென் இரண்டு விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

193 என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே தடுமாறியது. முந்தைய ஆட்டத்தில் சதமடித்த ஹேரி ப்ரூக் 9 ரன்களுக்கு வெளியேற, அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதியும் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மயான்க் அகர்வால் 48 ரன்கள் எடுத்திருந்தார்.

ஹைதராபாத் வெற்றி பெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், பந்து வீச வந்தார் அர்ஜுன் டெண்டுல்கர். சிறப்பாக பந்து வீசி, 6 ரன்கள் மட்டுமே வழங்கி, புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டையும் எடுத்தார்.

இது அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட், முதல் ஐபிஎல் விக்கெட்.

போட்டிக்கு பிறகு பேசிய அர்ஜுன் டெண்டுல்கர்,

“ஐபிஎல்லில் எனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளது நிச்சயம் சந்தோஷமாக இருக்கிறது. எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்துவதில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன். பந்துகளை வைட்களாக வீசி, பெரிய பவுண்டரி பக்கம் பேட்டர்களை பந்தை அடிக்க வைப்பதே திட்டமாக இருந்தது” என்றார்.

போட்டிக்கு பிறகு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்,

“சிறப்பான ஆல் ரவுண்ட் பெர்பாமன்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி வெளிப்படுத்தியது. கேமரூன் க்ரீன் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கினார், இஷான் கிஷன், திலக் வர்மாவின் விளையாட்டு நாள்பட மெருகேறிக்கொண்டிருக்கிறது. ஐபிஎல் நாளுக்கு நாள் அதிக சுவாரஸ்யமடைகிறது.

இறுதியில், டெண்டுல்கருக்கு ஐபிஎல் விக்கெட்!” என்று பதிவிட்டிருந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு ஐபிஎல் கரியரில் விக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்த முதல் ஐபிஎல் விக்கெட் புவனேஷ்வர் குமாரின் விக்கெட். புவனேஷ்வர் குமார் தனது 19வது வயதில், உத்திர பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியபோது, அவர் தன் கரியரில் எடுத்த முதல் விக்கெட் அர்ஜுனின் தந்தை சச்சின் டெண்டுல்கருடையது.

சச்சின் அந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார்

நேற்றைய போட்டி முடிந்து பேசிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா,

“அர்ஜுன் டெண்டுல்கர் அணியுடன் மூன்று ஆண்டுகளாக பயணிக்கிறார். அவரது வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன், அவருக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியும், அணிக்கு என்ன தேவை என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

அவரது செயல்பாடுகளை, பந்துவீச்சு முறைகளை நாங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறோம். சிறப்பாக யார்க்கர்கள் வீசுகிறார், மேலும் போட்டியை அவர் எளிமையாக்க பார்க்கிறார்.

நான் என்ன செய்தாலும் எனக்கு உறுதுணையாக இருங்கள் என்பதே அர்ஜுன் எங்களிடம் வைக்கும் கோரிக்கை” என்று பேசினார் ரோஹித் சர்மா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?