WTC: "Ashwin ஏன் களமிறக்கப்படவில்லை?" - ரோஹித் சர்மா மீது கேள்வி எழுப்பும் மூத்த வீரர்கள்! Twitter
ஸ்போர்ட்ஸ்

WTC: "Ashwin ஏன் களமிறக்கப்படவில்லை?" - ரோஹித் சர்மா மீது கேள்வி எழுப்பும் மூத்த வீரர்கள்!

"அஸ்வின் போன்ற வீரர் இருக்கும் போது மைதானத்தின் தன்மையை பார்க்க கூடாது" - முன்னாள் இந்திய கேப்டன்

Antony Ajay R

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 பட்டியலில் அஸ்வின் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 

முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்காததனால் அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படாதது பெரிய அளவில் பேசு பொருளாக உருவாகியிருக்கிறது. 

தி ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டதனால் இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரு சுழற்பந்து வீச்சாளரும் பயன்படுத்தப்பட்டனர்.

சுழற்பந்து வீச்சில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஆனால் களத்தில் அவரால் ஆடுகளத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியவில்லை.

நேற்றைய போட்டியில் லன்ச் பிரேக்குக்கு பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி அசைத்துப்பார்க்க முடியாத பலத்துடன் களமிறங்கியது. 

இருவரும் பார்ட்னர்ஷிப்பாக 251 ரன்களைக் குவித்தனர். ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 3 வீக்கெட் இழப்புக்கு 327 ரன்களை குவித்திருக்கிறது. இந்திய அணியின் தேர்வின் மேல் கேள்விக்கனைகளைத் தொடுக்க இதுவே காரணமாக அமைந்தது. 

இது குறித்து  முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, “ஒரு கேப்டனாக நீங்கள் டாஸ் போடுவதற்கு முன்பு முடிவுகளை எடுத்தல் வேண்டும். இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடிவு செய்திருக்கிறது.

4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிகளும் பெற்றிருக்கிறோம். ஆனால் நான் ஒரு கேப்டனாக இருந்தேன் என்றால் - ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமான முடிவுகளை எடுப்பார்கள் - நானும் ரோஹித்தும் வித்தியாசமாக சிந்திக்கிறோம்/ ஒரு கேப்டனாக எனக்கு அஸ்வின் போன்ற தரமான ஸ்பின்னரை வெளியில் உட்காரவைப்பது கடினமானதாக இருந்திருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியின் 3வது செஷனில் இந்தியாவின் தாக்குதல்கள் எடுபடாமல் போனபோது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, “இந்தியா பலமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யவில்லை” என ட்வீட் செய்தார். 

முன்னாள் இந்திய வீர்ர சுனில் கவாஸ்கர்,  “நேற்றைய போட்டியில் அஸ்வினை சேர்க்காமல் இந்தியா ஒரு தந்திரத்தை இழந்துள்ளது. அவர் நம்பர் ஒன் வீரர். அஸ்வின் போன்ற வீரர்கள் இருக்கும் போது ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கக் கூடாது” என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஆணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், “இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸுக்கு தகுந்தாற் போல பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஜடேஜாவை விட அஸ்வின் அவர்களுக்கு சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அஸ்வினை எடுக்காதது ஆச்சரியமளிக்கிறது” எனக் கூறியுள்ளார். 

இணையத்திலும் பலர் ரோஹித் சர்மாவின் முடிவை விமர்சித்துள்ளனர்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?