Asia Cup 2023: மழையால் தடையான Ind vs Pak போட்டி - புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்? twitter
ஸ்போர்ட்ஸ்

Asia Cup 2023: மழையால் தடையான Ind vs Pak போட்டி - புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?

Keerthanaa R

நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மேட்ச் மழையின் காரணமாக தடையானது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் மொத்தம் ஆறு அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் க்ரூப் Aவிலும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் க்ரூப் Bயிலும் இடம்பெற்றுள்ளன

நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

5வது ஓவரின்போது மழை பெய்ததால், சிறிது நேரம் போட்டி தடைபெற்றது. மழை நின்று இந்திய அணி மீண்டும் விளையாட தொடங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கைக்கொடுக்கவில்லை.

இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா முறையே 87 மற்றும் 82 ரன்கள் எடுத்தனர். எனினும் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணி களமிறங்கும் முன்னர் மீண்டும் மழை பெய்ததால், போட்டி தடை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி ஏற்கனவே நேபாளம் அணியுடன் மோதி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதனால் மொத்தம் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

சூப்பர் 4 சுற்றுக்கு இரண்டு க்ரூபகளில் இருந்தும் அதிக புள்ளிகளுடைய இரண்டு அணிகள் தகுதி பெறும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?