IndvsAus: மீண்டும் No.1 ஆன ஆஸ்திரேலியா; டெஸ்ட் தரவரிசையில் குழப்பம்! ஐசிசி விளக்கம் என்ன?  twitter
ஸ்போர்ட்ஸ்

IndvsAus: மீண்டும் No.1 ஆன ஆஸ்திரேலியா; டெஸ்ட் தரவரிசையில் குழப்பம்! ஐசிசி விளக்கம் என்ன?

இந்த சாதனை கொஞ்ச நேரம் தான் நீடித்தது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி ஓரிடம் சறுக்கி, ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஐசிசி விளக்கமளித்திருக்கிறது.

Keerthanaa R

நேற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்தை கைப்பற்றிய இந்திய அணி, சில மணி நேரங்களிலேயே இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. தவறுதலாக இந்தியாவை முதலிடத்தில் வைத்ததற்காக ஐசிசி மன்னிப்பும் கேட்டுள்ளது.

சர்வதேச ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டு, தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிடும். இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் தான் ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கு அணிகள் தேர்ச்சி பெறும்.

இந்திய அணி சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் புதுப்பித்த பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

அதில் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா முதலிடம் பெற்றிருந்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா இருந்த நிலையில், நடந்து முடிந்த பிஜிடி கோப்பை முதல் டெஸ்ட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது( ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசம்).

முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்திய அந்த இடத்திற்கு முன்னேறியது. ட்விட்டரில் No.1, Virat Kohli உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்தன

இதனை தொடர்ந்து, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஒரு ஆசிய அணி மூன்று ஃபார்மாட்களிலும் முதலிடத்தில் இருப்பது இதுவே முதன்முறை என்ற சாதனையும் படைத்தது.

ஆனால், இந்த சாதனை கொஞ்ச நேரம் தான் நீடித்தது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி ஓரிடம் சறுக்கி, ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது.

இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஐசிசி விளக்கமளித்திருக்கிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துவிட்டது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா தான் முதல் பொசிஷனில் இருக்கிறது. சிறிது நேரம் இந்தியா முதலிடத்தில் இருந்ததாக ஐசிசி தளத்தில் வெளியானது தவறான பட்டியல் எனக் கூறி, இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.

இதனால் 126 என்ற ரேட்டிங்குடன் ஆஸ்திரேலிய முதலிடத்திலும், 115 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?