தீபக் சஹர் Twitter
ஸ்போர்ட்ஸ்

CSK : தீபக் சஹர் அணிக்கு திரும்புவதில் சிக்கல்; மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Antony Ajay R


CSK அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிக மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களான சுரேஷ் ரெய்னா, டூப்ளசி போன்றோரை இழந்திருக்கிறது. கேப்டன் பதவியிலிருந்து தோனி வெளியேறி ஜடேஜா அந்த பதவியில் திணறி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சீசன்களில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த தீபக் சஹர் இந்த ஆண்டு விளையாட வாய்ப்பில்லை எனச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அணியின் ஓப்பனர் ருத்துராஜ் கெய்க்வாட் அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். பேட்டிங் மோசமாக இருக்க பௌலர்களின் சொதப்பல்களும் மைதானத்தில் பல்லிளிக்கிறது.

டூப்ளசி

மூத்த வீரர்கள் அணியில் இல்லாததே தோல்விக்குக் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். சமீபத்தில் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவர் டூப்ளசியை கைவிடாமல் வைத்து அவரை கேப்டனாக்கியிருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஒரு வேளை சஹர் ஆட்டத்திற்குள் வந்ததும் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது இந்த செய்தி.

சஹர் 2018ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்து எதிர் அணியின் மீது அழுத்தம் கொடுப்பது அவர் ஸ்டைல். பௌலிங் மட்டுமின்றி சிறப்பாக பேட்டிங்கும் செய்யும் திறன் பெற்றவர் சஹர்.

கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அவருக்குத் தொடையில் தசை சிதைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சஹர் ஐபிஎல் ஏலத்தில் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட எக்ஸ்பென்சிவ் வீரர். ஐபிஎல்-ன் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிந்தாலும் ரசிகர்கள் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு முதுகில் இருக்கும் காயம் காரணமாக அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம் எனக் கூறப்படுகிறது. இன்று சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் விளையாடுகின்றனர். இதில் போன சீசன் வரை சி.எஸ்.கே ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்த டூப்ளசிஸ் எதிர் அணியின் கேப்டனாக விளையாடுகிறார். இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?