2023 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இம்முறை போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுகிறது.
எந்த நாட்டில் உலகக்கோப்பை நடக்கிறதோ, அந்த நாட்டு அணி தான் உலகக்கோப்பை வெல்கிறது என்று செண்டிமென்ட்டாக நம்பப்படுகிறது. அதற்கேற்றார் போல, 2011ஆம் ஆண்டு உலககோப்பை இந்தியாவில் நடந்த போது, எம் எஸ் தோனி தலைமையில் இந்திய அணியே கோப்பையை வென்றது.
இந்த தொடரில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் எதிர்பார்ப்புக்கு மிஞ்சிய திறனை வெளிப்படுத்தி இருந்தார். தொடர் நாயகன் விருதும் வென்றார்.
இந்த உலகக்கோப்பை தொடர்களில் சிறந்த, மறக்கமுடியாத ஆட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்
2011ஆம் ஆண்டு தொடரின் நாயகன் மட்டுமல்ல, கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின், ஏன் கிரிக்கெட் ஜாம்பவான்களின் நாயகனாகவே திகழ்ந்தார் யுவராஜ் சிங்.
புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், களத்தில் விளையாடும்போது ரத்த வாந்தி எடுத்தபோதிலும், அணிக்காக தன்னை முழுதாக அர்ப்பணித்திருந்தார் யுவி.
2011 உலகக்கோப்பையில், 9 போட்டிகளில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இவரது சராசரி 90ஆகவும், ஸ்டிரைக் ரேட் 86ஆகவும் இருந்தது. ஒரு போட்டியில் 5 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார் யுவராஜ் சிங்
இதுவரை உலகக்கோப்பையில் சொல்லிக்கொள்ளும்படியான சாதனை எதுவும் புரிந்ததில்லை இந்த அணி. எனினும், அணியின் வீரர்கள் பலர் பிராகிசித்திருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு தொடரில் வங்கதேசம் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
அதன் பிறகு 2019 உலகக்கோப்பையில், வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசனின் விளையாட்டு அந்த ஆண்டின் சிறந்த பர்ஃபாமன்ஸ்களில் ஒன்றாக அமைந்தது.
இவர் அந்த ஆண்டு, 606 ரன்கள் குவித்ததுடன், 11 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.
பல கோடி ரசிகர்களால் கிரிக்கெட்டின் இறைவன் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், 2003 உலகக்கோப்பையின் நாயகனாக விளங்கினார்.
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 2003 உலகக்கோப்பையின் போது 11 போட்டிகளில் 673 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இவரது சராசரி 61.18ஆக இருந்தது. மேலும் ஒரு போட்டியில் சதமடித்ததுடன் (152 ரன்கள்), 6 போட்டிகளில் அரைசதம் கடந்திருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இவர் 75 பந்துகளில் 98 ரன்கள் அடித்திருந்தார். இது இன்றளவும் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
2019 உலகக்கோப்பையின் போது, எதிரணி பேட்டர்களை திக்குமுக்காட செய்தவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். 10 போட்டிகளில் 27 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதுவே ஒரு உலகக்கோப்பை தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கையாகும்
இவரது சராசரி 18.59ஆகவும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
அந்த தொடரில், ஸ்டார்க்கின் பந்துகள் ஸ்டம்புகளை மட்டுமல்ல, சில பேட்டர்களையும் பதம்பார்த்தது.
இவர் இந்த ஆண்டு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ஹாட் ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார்
தற்போது அணியின் கேப்டனாக உலகக்கோப்பையில் இந்தியாவை வழிநடத்தவுள்ளார் ரோஹித் சர்மா. இவர் 2019 உலகக்கோப்பையின் போது மொத்தம் 9 போட்டிகளில் 648 ரன்கள் எடுத்தார். சராசரி 81 ஆக இருந்தது, ஸ்டிரைக் ரேட் 98.33.
இந்த தொடரில் 5 சதங்கள், மற்றும் ஒரு அரைசதம் அடித்திருந்தார் ரோஹித் சர்மா. பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்கள் அடித்திருந்தார். இதுவே ஒரு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோஹித் சர்மா
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust