ஜட்டு, தோனி Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : “பழைய ஜடேஜாவை இழக்க விரும்பல” - கேப்டன்சி குறித்து மனம் திறந்த தோனி

கேப்டன் அணியின் பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் சொந்த பர்ஃபாமென்ஸும் அடங்கும். மனதளவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் அதைப்பற்றியேதான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும். தூங்கும்போதுகூட.. - தோனி

Antony Ajay R

இந்த ஐபிஎல் சீசனில் புதிய கேப்டன் ஜடேஜாவின் தொடர் சொதப்பலுக்குப் பின்பு மீண்டும் தோனி கேப்டனாகிறார் என அறிவிக்கப்பட்டது. கேப்டனாக களமிறங்கிய தோனி முதல் போட்யில் வெற்றியும் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மேட்ச் முடிந்த பின்னர் தோனி கேப்டன்சி குறித்துப் பேசியது வைரலாகியுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டும் தொடர்ந்து விளையாடுவது குறித்துப் பேசியிருந்தார்.

சிவம் தூபே - ப்ராவோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக கான்வே மற்றும் சிமர்ஜீத் சிங் களமிறங்கினர். போட்டியில் ருது ராஜ் - கான்வே அதிரடி வெற்றிக்கு வழி வகுத்ததுலதன் பிறகு தோனி பேசியதாவது:

தோனி

"கடந்த சீசனின் போதே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு தெரியும். அதற்குத் தயாராவதற்கு போதிய நேரம் அவருக்கு இருந்தது. இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம். முதல் இரண்டு போட்டிகளில் நிறைய விஷயங்கள் என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு சென்றன. அதற்குப் பிறகு முடிவுகள் எடுக்கும் பொறுப்பை மொத்தமாக ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டேன். இந்த சீசன் முடியும்போது கேப்டன்ஸி வேறு யாரோ செய்த உணர்வு இருக்கக்கூடாது, வெறும் டாஸ்ஸுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த உணர்வு அவருக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதனால் படிப்படியாக அவரிடம் முழு பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

களத்தில் ஒரு கேப்டன் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவேண்டும். அணியின் பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் சொந்த பர்ஃபாமென்ஸும் அடங்கும். மனதளவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் அதைப்பற்றியேதான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும். தூங்கும்போதுகூட இது நடக்கும்.

IPL 2022

கேப்டன்ஸியால் ஜடேஜாவும் சொந்த ஆட்டம் பாதிக்கப்பட்டது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கும் ஜடேஜா அணிக்குத் தேவை. கேப்டன்ஸி இல்லை என்றால் அவர் கிடைப்பார் என்றால் அதுதான் அணிக்கும் தேவை. நாங்கள் ஒரு சிறப்பான ஃபீல்டரை இழந்தோம். டீப் மிட்-விக்கெட் பொசிஷனில் நல்ல ஒரு ஃபீல்டரை நிறுத்தப் போராட வேண்டியதாக இருந்தது. எப்படியும் 17-18 கேட்ச்களை இதுவரை விட்டிருக்கிறோம்."

இதற்கு முன்னர் அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்த கேள்விக்கு, “அடுத்த ஆண்டும் நீங்கள் என்னை மஞ்சள் நிற உடையில் தான் பார்பீர்கள். ஆனால் அது ப்ளேயிங் 11 மஞ்சள் உடையா என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும்” எனக் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?