Sourav Ganguly Twitter
ஸ்போர்ட்ஸ்

75வது சுதந்திர தினம் : மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் கங்குலி

Keerthanaa R

இந்தியாவில் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. நாடு முழுவதும், எல்லா துறைகளை சார்ந்தவர்களும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சார்பாகவும் பங்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

அதனடிப்படையில், லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீகின் இரண்டாவது சீசன் நடைபெறவுள்ளது. இதில் இந்த வருடத்திற்கான இந்திய அணியை, பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி வழிநடத்தவுள்ளார்.

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக இப்போட்டி நடைபெறும். இதற்காக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டென்ஸில் ஒரு சிறப்பு மேட்ச் நடைபெறும். மறுநாள், செப்டம்பர் 17ல் நடைபெறும் மேட்ச் LLC சீசன் இரண்டுக்கான துவக்கமாகவும் அமையும்.

இந்திய அணி இங்கிலாந்தின் வேர்ல்டு ஜயன்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த அணியை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான மோர்கன் வழிநடத்தவுள்ளார்.

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் ஒரு உலகளாவிய டி20 தொடர். இது அனைத்து நாடுகளிலிருந்தும் ஓய்வு பெற்ற கிரிகெட் ஜாம்பவான்களை மீண்டும் இணைக்கும். இதன் முதல் சீசனில் இந்தியன் மஹாராஜாஸ், ரெஸ்ட் ஆஃப் ஏசியா மற்றும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்டு என மூன்று அணிகள் இடம்பெற்றிருந்தது.

ஓமன் கிரிக்கெட் அகாடமி, மஸ்கட்டில் இத்தொடர் நடைபெற்றது. முதல் சீசனில் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் வழிநடத்தினார். இந்த வருடத்திற்கான தொடரை கங்குலி வழிநடத்தவுள்ளார்.

இம்முறை LLC யில் நான்கு அணிகள் மோதவுள்ளது. இந்திய அணியை பொருத்தவரை கங்குலி தலைமையிலான அணியில் வீரேந்தர் சேவாக், முகமது கைஃப், பதான் சகோதரர்கள், ஹர்பஜன் சிங் மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

10 நாடுகளிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 15 போட்டிகள் இந்த சீசனில் நடைபெறவுள்ளது. இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீகின் ஆணையராக இருப்பவர் முன்னாள் இந்திய அணி வீரர் ரவி சாஸ்திரி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?