உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?  News Sense
ஸ்போர்ட்ஸ்

உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?

Antony Ajay R

2022 கால்பந்து உலகக் கோப்பை நடத்துகிறது கத்தார். வளைகுடா பகுதியில் இருக்கும் சிறிய நாடான இது உலகக் கால்பந்து போட்டியை நடத்துவது வியப்பளிப்பதாக உள்ளது. கத்தார் கால்பந்து நடத்துவதாக வெளியான அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 'அதில் முக்கியமானது பாலைவனத்தில் கால்பந்து நடத்துவது எப்படிச் சாத்தியம் என்பது தான்'.

கத்தாரில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 90 நிமிடங்கள் இந்த வெப்பநிலையில் வீரர்கள் ஒடுவது மிகுந்த சவாலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பர்வையாளர்களுக்குமே இது அசாதாரணமானதாக மாறக்கூடும்.

ஆனால் கத்தார் சிறப்பாக இந்த விளையாட்டை நடத்தி முடிப்பதில் உறுதியாக இருக்கிறது. என்னதான் வெப்பமான நாடாக இருந்தாலும் சிறிதும் அசௌகரியமில்லாமல் போட்டிகளை நடத்த தொழில்நுட்பத்தின் உதவியை நாடியிருக்கிறது கத்தார்.

அத்துடன் குளிர்காலத்தில் போட்டிகள் நடப்பது கத்தாருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த 8 மைதானங்களைத் தேர்வு செய்திருக்கிறது. அதில் முக்கியமான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அல் ஜனோப் மைதானத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

கத்தாரின் வெப்பநிலைக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று கடலில் இருந்து வரும் வெப்பக்காற்று. இதனை தடுக்க அரங்கின் மேற்கூரை காற்று பாய்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் இதன் மேற்கூரைக்கு வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரங்கின் வெளிப்புறத்தில் மட்டுமல்லாது உட்புறத்திலிருந்தும் வெப்பம் எழும். போட்டி நடைபெறும் ஒரு நாளில் 40000 மக்கள் வரை கூடுவர். இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வெப்பம் வெளிப்படும். ஆனால் ஒவ்வொருவருக்கும் குளிச்சியை உறுதிபடுத்த வேண்டியது கத்தார் அரசின் கடமை. இதற்காக நவீன தொழில்நுட்பத்தைக் கையிலெடுத்திருக்கிறது கத்தார்.

பார்வையாளர்கள் அமர்ந்துள்ள ஒவ்வொரு இருக்கையின் கீழும் துவாரங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக குளிர்ந்த காற்று வருகிறது. இதனால் பார்வையாளர்கள் அதிக வெப்பத்தை உணரமாட்டார்கள். ஆனால் அகண்ட மைதானத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வீரர்கள் அதிக வெப்பத்தால் சோர்வடையாமல் இருக்க வேறு வழிகள் இருக்க வேண்டும்.

சாதரணமாக கால்பந்து போட்டியில் ஒரு வீரர் 10 கிலோமீட்டர் வரை ஓடுகிறார். இதனால் 3 லிட்டர் வரை வியர்வை வெளிப்படும். வீரர்கள் குளிர்ச்சியுடனும் நீர்ச்சத்தை இழக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.

மைதானத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்த பெரிய துவாரங்களின் வழியாக குளிர்ந்த காற்று வெளியேற்றப்படுகிறது. இந்த காற்று வீரர்கள் நேரடியாக காற்று வீசுவதை உணராத விதமாக குறிப்பிட்ட கோணத்தில் வீசும்.

இந்த காற்று இயல்பாக சூடாகிறது. சூடான காற்று மீண்டும் உறிஞ்சப்பட்டு ஏர்கண்டீஷனர்கள் மூலம் குளிர்விக்கப்பட்டு குளிர்ந்த காற்றாக மைதானத்தை வந்தடைகிறது. ஏர்கண்டீஷனர்கள் செயல்படுவதற்காக தோஹாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் சூரியமின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த அமைப்பையும் ஏர்கண்டிஷனிங் நிபுணரான டாக்டர் சௌத் அப்துல் கானி உருவாக்கியுள்ளார். 2019ம் ஆண்டு தோஹாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவ பகிர்வுகள் தங்களுக்கு உதவியதாக அவர் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.


இந்த தொழில்நுட்பங்கள் மறுபக்கம் சுற்றுசூழலுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கு இல்லை. என்ன தான் சூரிய மின்சக்தியை கத்தார் பயன்படுத்தினாலும் ஏர்கண்டிஷனிங்கின் போது பசுமை இல்லை வாயுக்கள் வெளியேறுவது தவிர்க்க முயாதது. இதற்கு மாற்றுத் திட்டங்கள் இருப்பதாக கத்தார் கூறினாலும் வெளிப்படையாக எதுவும் முன்வைக்கப்படவில்லை.

இது தவிர உலகக்கோப்பை அரங்குக்கான கட்டிட பணியின் போது 2021ஆம் ஆண்டில் மட்டும், 50 தொழிலாளர்கள் இறந்தனர்; 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு சேகரித்த தரவுகள் கூறுகின்றன. மேலும் 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றிய திட்டத்தில் பலரது பாஸ்போர்ட்களை வாங்கி வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?