ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் போராடி தோற்றது லக்னோ அணி.
வெறும் 136 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் காத்திருந்தது அதிர்ச்சி. 20வது ஓவரில் 12 ரன்கள் தேவை என்றிருக்க, 4 பந்துகளில் 2 ரன் அவுட், 2 விக்கெட் என 4 விக்கெட் அடுத்தடுத்து விழ, 7 ரன் வித்தியாசத்தில் தோற்றனர் லக்னோ அணியினர்.
டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் வெறும் 135 ரன்களையே எடுத்தது அணி. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன் எடுத்திருந்தார். 200+ ரன்களை குவிக்கப்படும் ஐபிஎல்லில் 135 ரன் என்பது மிக மிக எளிதான் இலக்கு.
குறைவான ஓவர்களில் இலக்கை அடைந்துவிட்டால், நல்ல ரன் ரேட்டுடன், புள்ளிப்பட்டியலில் அணிகள் தங்களது இடங்களை முடிவு செய்துகொள்ளலாம், இன்னும் சொல்ல போனால் டாமினேட் செய்யலாம்!
136 ரன் டார்கெட்டை துரத்தி களமிறங்கிய எல் எஸ் ஜி அணிக்கு நல்ல தொடக்கமே கிடைத்தது. வலுவாக நின்ற கேஎல் ராகுலை குஜராத் பௌலர்களால் அசைக்க முடியவில்லை. மறுபக்கம் இருந்தவர்களை வேட்டையாடியது குஜராத் படை.
அதிரடி ஆட்டக்காரர்களான பூரன், பதோனி, ஸ்டாயினிஸ் தீபக் ஹுடா எல்லாரையும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினர்.
கடைசி ஓவரில் 12 ரன்களே தேவையாக இருந்தது. அனைவருக்குமே வெற்றி லக்னோ பக்கம் என்ற எண்ணம் தான் இருந்தது.
"குறுக்க இந்த கௌஷிக் வந்தா?" என்பதுபோல பந்துவீச வந்தார் மோஹித் சர்மா. முதல் பந்தில் ராகுல் 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கி விட அது ஃபீல்டரின் கையில் சென்று விழுந்தது. மூன்று நான்கு மற்றும் ஐந்தாவது பந்துகளில் தொடர்ந்து மூன்று விக்கெட்கள் விழுந்தன, அதில் இரண்டு ரன் அவுட்கள்.
இது தான் நடக்கிறது என உணருவதற்குள், 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வென்றிருந்தது.
போட்டி முடிந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல், "இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் வேகமாக நடந்துவிட்டது. நாங்கள் எங்கு தவறு செய்தோம், எங்கு போட்டியை இழந்தோம் என்பதை கணிக்க முடியவில்லை.
போட்டி எங்கள் வசம் தான் இருந்தது. எனினும், இறுதியில் இது ஒரு போட்டி. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வென்றிருக்கிறோம். ஆனால், இந்த தோல்வி கொஞ்ச நாட்களுக்கு குத்தும்" என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் தோற்றாலும், 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது லக்னோ அணி
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust