இந்திய அணி  டிவிட்டர்
ஸ்போர்ட்ஸ்

சூர்யகுமார், கோலி அபாரம்; ஆஸி, பாகிஸ்தானை ஒரே போட்டியில் வீழ்த்திய இந்திய அணி - எப்படி?

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியா வருகை தந்திருந்தது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வென்று, தொடரை சமன் செய்திருந்தது.

Keerthanaa R

டிசைடர் மேட்சில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என கைப்பற்றியுள்ளது இந்தியா. 

ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய வெற்றி, ஓரே ஆண்டில் அதிக போட்டிகளை வென்ற அணி (21 போட்டிகள்) என்ற உலக சாதனையையும் இந்திய அணிக்கு சேர்த்துள்ளது. இதற்கு முன்னர் ஒரே ஆண்டில் 20 போட்டிகளை வென்றிருந்த பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். 

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியா வருகை தந்திருந்தது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வென்று, தொடரை சமன் செய்திருந்தது. மழை காரணமாக இரண்டாவது டி20 இரு தரப்புக்கும் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர் 1-1 என்றிருந்த நிலையில், நேற்று, 25 செப்டம்பர் அன்று, மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்திருந்தது. களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் கேமரூன் கிரீன் வலுவான துவக்கத்தை கொடுத்தார். சொற்ப ரன்களில் மறுபக்கம் இருந்த வீரர்கள் சரிய, 21 பந்துகளில் கிரீன் 52 ரன்கள் குவித்து நம்பிக்கை நட்சத்திரமாக  திகழ்ந்தார்.

கிரீன் ஆட்டமிழந்த பிறகு ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் டிம் டேவிட் ஜோடி சரிந்திருந்த ஆஸ்திரேலிய அணியை தூக்கி நிறுத்தியது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்திருந்தது. கிரீன் 52, டிம் டேவிட் 54, டேனியல் சாம்ஸ் 28 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

187 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ராகுல், ரோஹுத் கைக்கொடுக்கவில்லை. பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோஹித் வெளியேறிய பின்னர் கோலியுடன் கைகோர்த்தார் சூர்யகுமார் யாதவ். 

ஒரு பக்கம் சிக்ஸர்கள் பறக்க, மறுபக்கம் பொறுமையை கடைப்பிடித்தார் கோலி. ஆட்டம் இந்திய அணி வசம்  திரும்பியது.

69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். பின்னர் ஹார்திக் பாண்டியா மற்றும் கோலி ஜோடி இணைந்தது. மீண்டும் பவுண்டரிகளை விளாச துவங்கிய கோலி 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 1 பந்து மீதமிருக்க இந்திய அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. 

இந்த வெற்றியின் மூலம் தொடரை வென்றது இந்திய அணி. இது இந்திய அணிக்கு இந்த ஆண்டில் 21வது வெற்றி மேலும் ஒரே ஆண்டில் அதிக டி20 போட்டிகளை வென்ற அணி என்ற உலக சாதனையும் படைத்துள்ளது. இதற்கு முன்னர் 20 டி20 போட்டிகளை வென்றிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனை முறியடித்துள்ளது இந்திய அணி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?