IND vs NZ: விராட்டின் அதிரடி! - 20 வருடம் சுமந்த துவேசத்தை தீர்த்தது இந்தியா
IND vs NZ: விராட்டின் அதிரடி! - 20 வருடம் சுமந்த துவேசத்தை தீர்த்தது இந்தியா Twitter
ஸ்போர்ட்ஸ்

IND vs NZ: விராட்டின் அதிரடி! 20 வருடம் சுமந்த துவேசத்தை தீர்த்தது இந்தியா

Antony Ajay R

இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் இந்தியா vs நியூசிலாந்து போட்டி நேற்று நடைபெற்றது.

2023 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல், டேபிளின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த அணிகள் மோதிக்கொண்டன.

இந்திய அணி பந்து வீசி ஆட்டத்தைத் தொடங்கியது. இந்த சீசனில் நன்றாக விளையாடி வந்த டெவான் கான்வே சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனது இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக இருந்தது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதன்முதலாக களமிறங்கியுள்ள முகமது ஷமி, வில் யங்கை 17 ரன்களில் அவுட் ஆக்கினார்.

அதன் பிறகு களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நிலை நிறுத்தினர்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக 3 கேட்சையும் தவறவிட்டது இந்திய அணி. 2020ல் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கேட்சை மிஸ் செய்திருக்கிறார் ஜடேஜா.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டத்தொடங்கினர்.

இருவரும் அரை சதம் அடிக்க, கூட்டணியை முறித்தாக வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு ஏற்பட்டது. அந்த வேலையை கச்சிதமாக செய்துமுடித்தார் ஷமி. அதிரடி காட்டி 75 ரன்கள் குவித்திருந்த ரச்சினை வெளியேற்றினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த டேரில் மிட்செல் சதம் அடித்தார். 1975க்கு பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த வீரர் என்ற பெறுமையைப் பெற்றார்.

130 ரன்களில் மிட்செலை வெளியேற்றினார் ஷமி. அடுத்தடுத்து வந்த சாண்ட்னர், ஹென்ரி ஆகியோரை வெளியேற்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஷமி. உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்த, 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது நீயுசிலாந்து.

274 ரன்கள் மற்றும் 2003ல் இருந்து நியூசிலாந்தை உலகக் கோப்பையில் தோற்கடித்ததில்லை என்ற அவப்பெயருக்கும் எதிராக களமிறங்கினார் கேப்டன் ரோஹித்.

நிதானமாக கில்லுடன் இணைந்து நியூசிலாந்து பௌளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். இவர்களது பார்ட்னர்ஷிப் 71 ரன்களை கடந்தது.

அரைசதம் அடிக்கும் சூழலில் அவுட் ஆகி, 46 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் ரோஹித். தொடர்ந்து சுப்மன் கில்லும் அவுட் ஆக, தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது இந்திய அணி. இருந்தும் ரசிகர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. களத்தில் கிங் கோலி நிதானமாக விளையாடினார்.

ஷ்ரேயஸ் ஐயர் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கே.எல்.ராகுல் விராட்டுடன் கைகோர்த்து இந்திய அணியை நிலைநிறுத்தினார்.

27 ரன்களில் ராகுல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் எதிர்பாராமல் ரன் அவுட் ஆனார். விராட் மற்றும் ஜடேஜா கைகோர்த்தனர்.

ஒரு விக்கெட் விழுந்தாலும் அடுத்தது களமிறங்கப்போவது பௌலர்கள் என்பதனால் பாதுகாப்பாக ஆடி வந்தனர். வெற்றியை நோக்கி விளையாடிய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.

இவர்களது கூட்டணியில் கதிகலங்கி தோல்வியை ஒப்புக்கொண்டது நியூசிலாந்து. 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்த கோலி 95 ரன்கள் எடுத்திருந்தபோது சதம் அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இருப்பினும் மறுமுனையில் பொறுப்பாக அதிராடி காட்டி வந்த ஜடேஜா அணியை வெற்றிபெற வைத்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை உலகக் கோப்பை போட்டியில் வென்றது இந்தியா.

கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதியில் அடைந்த தோல்விக்கும் பழி தீர்த்தது. தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று டேபிளிலும் முதல் இடத்தைப் பிடித்தது இந்திய அணி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?