தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனினும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங் செய்தது. தென் ஆப்ரிக்காவுக்கு துவக்க வீரர் பவுமா 3 ரன்களில் வெளியேறினாலும் ருசோ, டிகாக் இணை பக்கபலமாக நின்றனர். டிகாக் 68, ருசோவின் சதம், மற்ற இரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 227 ரன் எடுத்திருந்தது.
பின்னர் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷ்ரெயஸ் கைக்கொடுக்கவில்லை. அடுத்தடுத்து தென் ஆப்ரிக்க பவுலிங்கில் இந்திய பேட்டர்கள் சரியத் துவங்கினர். தினேஷ் கார்த்திக் மட்டும் அதிக பட்சமாக 46 ரன்னும், தீபக் சாஹர் 31 ரன்னும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், 18 ஒவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோற்றது. இது இந்திய அணி சந்திக்கும் மிகப் பெரிய தோல்வியும் கூட.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில், இந்தியா தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஒவர் மேட்ச் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust