இந்திய அணி  ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Virat Kohli: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா முதலிடம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Keerthanaa R

தரவரிசை பட்டியலில் மூன்று தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு நாள், டெஸ்ட், டி20 என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.

அதில் மூன்று ஃபார்மாட்களிலும் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் இருக்கும் முதல் ஆசிய அணி ஆகிறது இந்தியா.

கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் டி20 போட்டிகளில் இந்திய அணி 267 ரேட்டிங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

அதேபோல பிப்ரவரி 15ன் நிலவரப்படி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா 114 ரேட்டிங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 112 ரேட்டிங்குடன் ஆஸ்திரேலியா இருக்கிறது

டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை முதல் டெஸ்ட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா ஒரு இடம் இறங்கி இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. இந்திய முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் முறையே 115 மற்றும் 111 ரேட்டிங்குடன் இருக்கின்றன.

சேட்டன் சர்மா இந்திய அணி வீரர்கள், குறிப்பாக விராட் கோலி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர உண்மைகளுக்கு மத்தியில் இந்த செய்தி சற்றே ஆறுதலாக வந்துள்ளது.

ட்விட்டரில் No.1, Virat Kohli உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?