India vs Afghanistan: இரண்டாவது டி20-ல் பங்கேற்கிறார் கோலி!  virart kohli twitter
ஸ்போர்ட்ஸ்

India vs Afghanistan: இரண்டாவது டி20-ல் பங்கேற்கிறார் கோலி!

Antony Ajay R

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை எனினும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றது.

ரசிகர்கள் இரண்டாவது போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கைப் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். இரண்டாவது டி 20 போட்டி நாலை நடைபெற உள்ள நிலையில் இன்று இந்தூர் வந்துள்ளார் விராட் கோலி.

முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். அடுத்ததாக களம் இறங்கிய திலக் வர்மா 26 ரன்களிலும், சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஸ் அணியை தூக்கி நிறுத்தினர். குறிப்பாக சிவம் துபே 60 ரன்கள் விளாசினார். ஜித்தேஷ் சர்மா 31 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக ரிங்கு சிங் காட்டிய அதிரடியில் இந்திய அணி வென்றது.

இரண்டாவது போட்டியில் விராட் கோலி களமிறங்கினால் வெளியேறப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?