Ind vs SL: சாதனை படைத்த ஷமி; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா - புள்ளிப்பட்டியல் நிலை என்ன? twitter
ஸ்போர்ட்ஸ்

Ind vs SL: சாதனை படைத்த ஷமி; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா - புள்ளிப்பட்டியல் நிலை என்ன?

Keerthanaa R

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய வெற்றி கண்ட இந்திய அணி, உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது இலங்கை.

4 ரன்களுக்கு இந்திய அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா அவுட் ஆக, சற்றே பதற்றம் தோன்றியது.

எனினும், பின்னர் களமிறங்கிய விராட் கோலி, மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் கைகோர்த்து அணிக்கு வலு சேர்த்தனர்

நிதானமாக விளையாடி, தக்க நேரத்தில் அதிரடி பௌண்டரிகள் விளாசிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. கோலி 88, கில் 92, பல போட்டிகளாக சரியாக விளையாடாத ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்திருந்தனர்.

இலங்கை அணி பந்துவீச்சாளர் தில்ஷன் மதுசன்கா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 358 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறியது.

தொடக்க வீரர்கள் இருவரும் பூஜ்ஜியத்துக்கு அவுட் ஆகினர். ஷமி ஐந்து விக்கெட்கள், சிராஜ் மூன்று விக்கெட்கள் வீழ்த்த, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

மேலும், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார் ஷமி. வெறும் 14 இன்னிங்சில், 45 விக்கெட்களை பெற்றுள்ளார் மூத்த வீரர் முகமது ஷமி

இந்தியா 302 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல் அணியாக இந்தியா முன்னேறியுள்ளது.

புள்ளிப்பட்டியலில், இந்தியாவுக்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணிகள் உள்ளன.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளே அரையிறுதிக்கு செல்லும். வங்கதேசம் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?