இரண்டு தினங்களுக்கு முன் பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பை அரையிறுதியில் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. கணுக்காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடி வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றவர் நட்சத்திர வீரர் பிரணாய்.
இந்நிலையில் 15 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு துவங்கிய போட்டியில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியா அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய இந்தோனேசிய வீரர் அந்தோணி கிங்திங்கை எதிர்கொண்ட லக்ஸ்யா சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இதனால் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இரண்டாவது சுற்றில் களமிறங்கிய சாத்விக்-சிராக் ஜோடி மீண்டும் இந்தோனேசிய இணையை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய கிடம்பி ஸ்ரீகாந்த், மூன்றாவது சுற்றிலும் வெற்றி பெற, 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை முற்றிலும் தோற்கடித்து, தாமஸ் கோப்பையை இந்தியா வென்றது. 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெல்லும் முதல் கோப்பையாகும் இது.
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுமட்டுமல்லாமல், 73 ஆண்டுகளுக்கு பிறகு தாமஸ் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் பேட்மின்டன் அணிக்கு, தலா ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது மத்திய அரசு
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp